மீசை முறுக்கிய வீரா்கள்
ஆசியர்களான, அதிலும் தெற்காசியர்களாகிய எமக்கு மிகவும் பரீட்சயமான - எமது நாட்டு அணி
சாதிக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டாகத்தான் இருக்கும்.
இத்தகைய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு ஸ்டைல்களில் தம்மை மாற்றிக்கொண்டு களமிறங்கி ரசிகர்களைக் கவர்வர்.
அந்த வகையில் அந்தக் காலம் தொடக்கம் இந்தக் காலம் வரை தமிழர்களாகிய நம்மை அடையாளம் காட்டும் முறுக்கு மீசையை வளர்த்து விளையாடிய - விளையாடும் பல்வேறு நாட்டு வீரர்கள் சிலர் குறித்து இங்கு சிறிது அலசுகிவோம்.
மேவ் கியூஸ்
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளராக 1985-1995 வரையான காலப்பகுதியில் விளையாடியர்தான் மேவ் கியூஸ். இவர் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 212 விக்கெட்டுகளையும், 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
கிக் டரம்பிள்
இவரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்தான். ஆனால், இவர் துடுப்பாட்ட வீரர். இடது கைத் துடுப்பாட்ட வீரரான இவர், 32 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். அவற்றில் 851 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். 1890-1904 வரையான காலப்பகுதியில் இவர் விளையாடியுள்ளார்.
இயன் சப்பல்
1964-1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரராக இருந்த சப்பல், 75 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,345 ஓட்டங்களையும் 16 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 673 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். 196 ஓட்டங்கள் அடித்ததே இவரது டெஸ்ட் அதிகூடிய ஓட்டமாகும். இவர் 1976ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் பூன்
1984-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரராக விளங்கிய இவர், 107 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 7,422 ஓட்டங்களையும் 181 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5,964 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஓர் இன்னிங்ஸிற்கான அதிகூடிய ஓட்டமாக 200 விளங்குகிறது.1994ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
டென்னிஸ் லில்லி
அவுஸ்திரேலியாவின் சகல துறை வீரரான இவர், 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 905 ஓட்டங்களையும் 355 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
63 ஒருநாள் போட்டிகளில் 240 ஓட்டங்களையும் 103 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ள இவர், 1973ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
கிரேஹம் கூச்
இங்கிலாந்து அணிக்காக விளையாடிய சகலதுறை வீரரான கூச், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,900 ஓட்டங்களையும் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் இவர் 333 ஓட்டங்களை அடித்ததன் மூலம் முச்சதம் விளாசிய பெருமையைப் பெற்றுள்ளார். அதேவேளை, 125 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இவர் 4இ290 ஓட்டங்களையும் 36 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
1980ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
ஜக் ரசேல்
1987-1998ஆம் ஆண்டு காலப் பகுதியில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஜக் ரசேல், 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1897 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அதேவேளை, 40 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 423 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
1990ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
கபில்தேவ்
இந்திய அணியை வழிநடத்தி அந்த அணிக்கு 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முதல் அணித்தலைவராக விளங்கிய இவர், 1978-1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் விளையாடியுள்ளார்.
அத்துடன், சகலதுறை வீரராக விளங்கிய இவர் 131 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,248 ஓட்டங்களையும் 434 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
அதேபோல 225 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3,783 ஓட்டங்களையும் 253 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
1983ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
ஜாவிட் மியாண்டட்
பாகிஸ்தான் அணியில் 1975-1996 காலப்பகுதியில் முழுநேரத் துடுப்பாட்ட வீரராகவும் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் விளங்கிய இவர், 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8,832 ஓட்டங்களையும் 17 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் 233 ஆட்டங்களில் பங்கேற்று 7,381 ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
1982ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
மிச்சல் ஜோன்சன்
2005ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் அவுஸ்திரேலிய அணி சார்பாக சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்த இவர், கடந்த மாதம் 13ஆம் திகதி தொடக்கம்17ஆம் திகதிவரை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்துடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றார்.
அவுஸ்திரேலிய அணியின் அண்மைக்கால பெறுபேறுகளின் அடிப்படையில் அந்த அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாள
ராக இவர் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார்.
முழுநேரப் பந்துவீச்சாளரான இவர். 73 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 313 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். அதேவேளை 109 இன்னிங்ஸ்களில் 2,065 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். இவர் 123 ஓட்டங்களைச் சேர்த்ததன்மூலம்
சதம் ஒன்றையும் விளாசிய பெருமையைப் பெற்றார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்த
வரையில் 153 போட்டிகளில் பங்கேற்று 239 விக்கெட்டுகளையும் 951 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். அதேபோல 30 இருபது-20 போட்டிகளில் பங்கேற்று 38 விக்கெட்டுகளையும்109 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். 2009, 2014ஆம் ஆண்டுகளில் ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிவானார். அதேபோல, 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவரது சிறந்த தரவரிசையாக 2ஆம் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரவீந்திர ஜடேயா
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்த இவர், கிரிக்கெட்டின் மூன்று விதமான ஆட்டங்களிலும் கலக்கி வருகிறார். சகலதுறை வீரரான இவர் இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் போட்டிகளில் பங்கேற்று 473 ஓட்டங்களையும், 68 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் 121 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 1804 ஓட்டங்களையும், 144 விக்கெட்டுகளையும் சாய்த்த அதே
வேளை, 22 இருபது-20 போட்டிகளில் ஆடி 84 (12இன்னிங்ஸ்) ஓட்டங்களையும் 14 விக்கெட்டுகளையும் பிடுங்கியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவரது பங்கும் மிக முக்கியமானதாக விளங்கியது.
ஷிகார் தவான்
2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணி
சார்பாகக் களமிறங்கிய இவர், நடப்பு இந்திய அணியின் முன்னணித்துடுப்பாட்ட வீரராக ஜொலித்து வருகிறார்.
இவர் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1308 ஓட்டங்களையும், 69 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2,791 ஓட்டங்களையும் சேர்த்த அதேவேளை, 8 இருபது-20 போட்டிகளில் பங்கேற்று 115 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்தியத் திரைப்பட நாயகர்கள் போல மீசையை அடிக்கடி முறுக்கிவிடும் இவரது ஸ்ரைலுக்கு அடிமையானவர்கள் பலர். அவர்களுள் இந்திய முன்னாள் வீரரான டிராவிட்டும் அடங்குவார். இதுகுறித்து அவர் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரராக தவான் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment