Monday, June 2, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (5)

கடந்த வாரத் தொடர்ச்சி...

கணிப்பில் கலக்கிய போல்

கடந்தவாரம் இப்பத்தியில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்களில் தங்கப்பந்து வென்ற வீரர்கள் குறித்து விரிவாகப் பார்த்தோம்.
இம்முறை தங்கப்பந்து மற்றும் தங்கக் கையுறைகளை வென்ற வீரர்கள் குறித்த விவரங்களை இங்கே விரிவாக ஆராய முடியவில்லை. எனினும், அதற்குப் பதிலாக தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வரைவாக கீழே தரப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, 2010ஆம் அண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பெரிதும் புகழ்பெற்று விளங்கிய விடயங்களில் போல் என்ற பெயரைக் கொண்ட ஒக்டோபஸும் ஒன்றாகும். இதுகுறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
ஜேர்மனியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் கண்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த போல் ஒக்டோபஸ், ஜேர்மனி பங்ககேற்ற போட்டிகள் அனைத்தினதும் முடிவுகளை ஒவ்வொரு போட்டிக்கு முன்னரே சரியாகக் கணித்துக் கூறி வந்தது.
அந்த வகையில் ஜேர்மன் விளையாடிய ஸ்பெய்னுக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் ஸ்பெய்னே வெல்லும் எனக் கணித்துக் கூறியது. அது சரியாகவே நடந்தது.
அதேபோல, இறுதியாட்டம் குறித்தும் கணித்தது. அதாவது,  நெதர்லாந்து - ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில் ஸ்பெய்னே கிண்ணம் வெல்லும் என்பதை அது கணிப்பிட்டது போலவே ஸ்பெய்னே கிண்ணத்தையும் சுவீகரித்தது.
இந்தக் கணிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது என்றால், இரண்டு கண்ணாடித்தொட்டிகளுள் குறித்த போட்டியில் விளையாடும் இரு அணிகளதும் கொடிகளை நீரில் மிதக்க விட்டு விடுவார்கள். பின்னர் அந்த தொட்டிகளின் மீது ஒக்டோபஸை விடுவார்கள். அது எந்தத் தொட்டியின் மீது இருக்கிறதோ அந்த கொடிக்குரிய நாடுதான் வெல்லும் என்பது கணிப்பாக அமைந்தது.
2008ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி பிறந்த இந்த ஒக்டோபஸ், உலகக்கிண்ணத் தொடர் முடிந்து சில வாரங்களில் (2010 ஒக்டோபர் 26)அது இறந்துபோனமையால் உதைபந்தாட்ட உலகமே பெரும்        சோகத்துள் மூழ்கியது.
(தொடரும்)


No comments:

Post a Comment

Total Pageviews