டென்னிஸ் நட்சத்திரங்களுக்கு உயர் அந்தஸ்துக் கொடுக்கக்கூடிய நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களுள் ஒன்று அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடராகும்.
நடப்பு வருடத்துக்கான இத்தொடர் கடந்த மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்றது.
இத்தொடரின் ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில்
இரண்டாம் நிலையில் உள்ள பிரிட்டனின் அன்ரி முர்ரேயை வீழ்த்திய முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் சம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையரில் பிரிட்டனின் ஜமை - பிரேஸிலின் புருனோ சௌரஸ் ஜோடி பட்டம் வென்றது.
அதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்திய ஜேர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் பட்டம் வென்றார். பெண்கள் இரட்டையரில் சுவிட்ஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் - இந்தியாவின் சானியா மிர்ஷா ஜோடி பட்டம் வென்று அசத்தியது.
அதேவேளை கலப்பு இரட்டையரில் ரஷ்யாவின் எலீனா வெஸ்னினா மற்றும் பிரேஸிலின் புருனோ சொவாரெஸ் ஜோடி சம்பியன் பட்டம் வென்றது.
2016ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓப்பின் டென்னிஸ் சம்பியன்களின் அட்டவணை இவ்வாறு அமைகின்ற அதேவேளை, இவர்களுள் தற்போது அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படுபவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை - சம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட - அசுர பலமிக்க வீராங்கனையான செரீனாவை வீழ்த்திய கெர்பர் ஆவார்.
மேற்கு ஜேர்மனியிலுள்ள பிரெமென் என்ற இடத்தில் போலந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தந்தையான ஸ்லாவோமிர் கெர்பருக்கும் ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட தாயான பியட்டாவிற்கும் 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி மகளாகப் பிறந்தார் கெர்பர். இவருக்கு ஜெஸிக்கா என்ற சகோதரியும் உள்ளார். தனது மூன்றாவது வயதிலேயே டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கிய கெர்பர், அதன் தொடர்ச்சியாக இளையோருக்கான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். ஜேர்மனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் வெற்றிகளைத் தனதாக்கத் தொடங்கியபோதும் இவரால், 2003 வரை எந்தவொரு இளையவர் பட்டத்தையும் வெல்லமுடியவில்லை.
15 வயது முதல் டென்னிஸை தொழில்முறையாக விளையாடத் தொடங்கிய கெர்பர், 2007ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனின் முதல் சுற்றில் விளையாடினார். பின்னர் 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓப்பனின் முதல் சுற்றில் விளையாடிய இவர், 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனில் தகுதிகாண் போட்டிகளுடன் வெளியேறினார். ஏனைய 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல்சுற்று இரண்டாம் சுற்று என விளையாடினார். பின்னர் தனது சுற்றுக்களை மேலோக்கி நகர்த்திய அவர், 2010ஆம் ஆண்டிலிருந்து நான்கு வகையான கிராண்ட்ஸ்ம் போட்டிகளிலும் பங்கேற்றும் தகுதியைப் பெற்று ஆடிவந்தார்.
2011ஆம் ஆண்டில் அமெரிக்க ஓப்பனில் முதன்முறையாக அரையிறுதிக்கு எட்டினார். அப்போது அவர் உலகளவிலான தரவரிசையில் 92ஆவது இடத்தில் இருந்தார். பின்னர் 2012ஆம் ஆண்டில் பிரெஞ்ச் ஓப்பினில் காலிறுதி வரையும், விம்பிள்டன் தொடரில் அரையிறுதிவரையும் முன்னேறினார். விம்பிள்டன் அரையிறுதிக்குள் நுழைந்ததன் மூலம் தரவரிசையிலும் உயர்ந்த இவர், ஐந்தாவது இடத்தை எட்டினார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த மாதம் 18ஆம் திகதி தொடங்கிய அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஆறாம் நிலை வீராங்கனையாக பங்குபற்றிய இவர், தான்தான் இந்தத் தொடரின் சம்பியனாவேன் என நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
பல்வேறு சவால்களை விடுக்கக்கூடிய வீராங்கனைகளை வென்று வென்று முதல் சுற்று இரண்டாவது சுற்று மூன்றாவது சுற்று நான்காவது சுற்று என முன்னேறிய இவர், 2012, 2013ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய ஓப்பினை வென்ற தரவரிசையில் 16ஆவது இடத்தில் இருந்த பெல்லாரஸைச் சேர்ந்த சவால் மிக்க வீராங்கனையான விக்டோரியா அஸரெங்காவை ஊதித்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறினார். அங்கே அரையிறுதியில் இவருக்குச் சவால் விடுக்கக் காத்திருந்தவர் அவுஸ்திரேலியாவின் ஜோகன்னா கொன்ரா ஆவார். இவரும் கெர்பரைப் போலவே பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய ஓப்பனின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதுவே இவரது கிராண்ட்ஸ்லாமில் உயர்ந்த பெறுபேறாகும். இவருடனான அரையிறுதியில் கெர்பருக்கு பெரியளவில் சவால் இல்லாமல்போக இறுதிக்கு முன்னேறுவது சுலபமானது.
இறுதிக்கு முன்னேறிய கெர்பர், எப்படியும் பட்டத்தை வெல்ல முடியாது என்றே உலக டென்னிஸ் வட்டம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், அங்கு நடந்தது வேறு.
21 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் செரீனா, இவர் அவுஸ்திரேலிய ஓப்பினை மாத்திரம் 6 தடவைகள் வென்றவர். கடந்த ஆண்டும் இவரே சம்பியனானார். இத்தகைய பாரிய சவாலான வீராங்கனையை அதுவும் தரவரிசையில் சில வருடங்களாக முதலிடத்தைத் தன்னகத்தே வைத்துள்ள ஒரு வீராங்கனையை எதிர்கொண்டார் கெர்பர்.
முதல் சுற்றை 4-6 என்ற கணக்கில் இழந்த செரீனா, அடுத்த சுற்றை 6-3 என்ற கணக்கில் தன்வசப்படுத்திதோடு செரீனாவே சம்பியன் என அனைவரும் நம்பிருக்க, அந்த நம்பிக்கைக்கு மாறாக 6-4 என்ற கணக்கில் மூன்றாவது சுற்றைத் தன் வசப்படுத்திய கெர்பர், தனது கிராண்ட்ஸ்லாம் கனவை நனவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அசுர பலம் வாய்ந்த வீராங்கனையாக வர்ணிக்கப்படும் செரீனா வில்லியம்ஸை கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் சாய்ப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. கெர்பருடன் சேர்த்து இதுவரை 4 பேர் மட்டுமே அவரை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் தோற்கடித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (2001 அமெரிக்க ஓப்பன், 2008 விம்பிள்டன்), ரஷ்யாவின் மரியா ஷரபோவா (2004 விம்பிள்டன்), அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸர் (2011 அமெரிக்க ஓப்பன்) ஆகியோரே செரீனாவை மகுடத்திற்கான ஆட்டத்தில் வீழ்த்தியிருக்கிறார்கள்.
நடப்பு அவுஸ்திரேலிய ஓப்பன் இறுதியாட்டம் தவிர செரீனா வில்லியம்ஸும் கெர்பரும் ஏற்கனவே 6 தடவைகள் மோதியுள்ளனர். அவற்றில் ஐந்து போட்டிகளில் செரீனா வில்லியம்ஸ் 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளார். ஒரே ஒரு போட்டியில் அதாவது 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கத்தைய தெற்கு வாணிப பெண்கள் குழுவினர் தொடரின் காலிறுதியாட்டத்தில் செரீனா வில்லியம்ஸை கெர்பர் 2-0 என்ற சுற்றுக் கணக்கில் வென்றிருந்தார். அப்போது அது பரபரப்பாகப் பேசப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது மிகப்பெரிய தொடரில் அசுரத்தனமாக சுழுன்றுகொண்டிருந்த பெரும்புயலை தனது திறமையால் காலடியில் சிக்கவைத்த கெர்பர், தரவரிசையில் 2ஆவது இடத்துக்கும் முன்னேறினார். அவரது அடுத்த குறி முதலிடமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. அந்த முதலிடத்தில் ஆசனம் போட்டு வீற்றிருப்பவர் செரீனா வில்லியம்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜெயானந்தன்

No comments:
Post a Comment