டென்னிஸ் போட்டிகளில் மிகப்பெரிய தொடர்களாக அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின், விம்பிள்டன் ஓப்பின் மற்றும் அமெரிக்க ஓப்பின் ஆகியன விளங்குகின்றன.
இவற்றுன் அவுஸ்திரேலிய ஓப்பின் வருடத்தின் ஆரம்பத்தில் ஜனவரி-பெப்ரவரி காலப்பகுதியிலும் பிரெஞ்ச் ஓப்பின் மே-ஜூன் காலப்பகுதியிலும், விம்பிள்டன் ஓப்பின் ஜூன்-ஜூலை காலப்பகுதியிலும் நடைபெறும் அதேவேளை, அமெரிக்க ஓப்பின் ஓகஸ்ட் - செப்டெம்பர் காலப்பகுதியிலும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழமை.
அந்த வகையில் அவுஸ்திரேலிய ஓப்பின் தொடர் முடிவடைந்துவிட்டது. தற்போது பிரெஞ்ச் ஓப்பின் தொடர் இன்றையதினம் ஆரம்பிக்கின்றது.
இன்று 24ஆம் திகதி ஆரம்பிக்கும் பிரெஞ்ச் ஓப்பின் டென்னிஸ் தொ டர் ஜூன் 7ஆம் திகதியுடன் நிறைவு பெறும். களிமண் தரையில் நடைபெறும் ஒரே ஒரு போட்டித் தொடராக இது விளங்குகின்றது.
114ஆவது கட்டமாக நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓப்பின் டென்னிஸ் தொடர், வழமை போல ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளுடன் இளையோருக்கான போட்டிகள் மற்றும் சக்கர நாற்காலி நபர்களுக்கான போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தற்போதைய நடப்பு சம்பியனாக விளங்குபவர் சுவிட்ஸர்லாந்தின் ரபோல் நடால் ஆவார். அதேபோல பெண்களுக்கான நடப்புச் சம்பியனாக ரஷ்யாவின் மரியா ஷரபோவா விளங்குகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் அதிக தடவைகள் (9) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கிறிஸ் எவெர்ட் 7 தடவைகள் சம்பியனாகியுள்ளார். களிமண் தரையில் நடைபெறும் இப்போட்டிகளில் இவரே ராஜாவாகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை நடைபெறும் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் முன்னிலையில் உள்ள நோவாக் ஜோகோவிக், இரண்டாம் நிலையில் உள்ள ரோஜர் பெடரர், மூன்றாம் நிலையில் உள்ள அன்டி முர்ரே மற்றும் 7ஆவது இடத்திலுள்ள ரபேல் நடால் ஆகியோரிடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கலாம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் இரண்டாவது இடத்திலுள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோருடன் மல்லுக்கட்டக்கூடியவர்களாக முறையே மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களிலுள்ள ரோமானியாவின் சிமோனா ஹெலெப்பே, செக் குடியரசின் பெட்ரா கிவிரோவா ஆகியோர் விளங்குகின்றனர். டென்மார்க்கின் கலோலின் வொஸ்னியாக்கியும் சவால் விடுக்கக்கூடும்.
அதேவேளை, கடந்த காலத் தொடர்களைப் போல சில அதிர்ச்சிகளும் நிகழலாம். முன்னணி நட்சத்திரங்களுக்கு சற்றும் எதிர்பாராத வீர, வீராங்கனைகள் அதிர்ச்சி வைத்தியம் பார்க்கவும் கூடும். எனவே, ஒவ்வொரு போட்டியின் முடிவையும் அந்தந்தப் போட்டிகளின் முடிவின் பின்னரே தீர்மானிக்கும் வகையில் அமையும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment