உலகளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் இருபது-20 பிரதான சுற்று எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகின்றன.
2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் இந்த ஆண்டு ஆறாவது கட்டத்தை அடைகின்றது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரின் சம்பியனாக அவுஸ்திரேலியாவின் நியூ
சௌத் வேல்ஸ் அணி தெரிவுசெய்யப்பட்டது.
2010ஆம் ஆண்டுக்கான சம்பியனாக சென்னை சுப்பர் கிங்ஸும், 2011ஆம் ஆண்டுக்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸும், 2012ஆம் ஆண்டுக்கான சம்பியனாக சிட்னி சிக்ஸர்ஸும். 2013ஆம் ஆண்டுக்கான சம்பியனாக மீண்டும் மும்பை இந்தியன்ஸும் தெரிவாகின.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன. ஏனைய இரண்டு அணிகளைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் நேற்றையதினம் ஆரம்பமாகின. 16ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டிகளில் நடப்புச் சம்பியனான இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ், இலங்கையின் சௌதேர்ன் எக்ஸ்பிரஸ், பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ், நியூஸிலாந்தின் நொதேர்ன் நைற்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிகளிலிருந்து தெரிவுசெய்யப்படும் இரு அணிகள் ஏனைய அணிகளுடன் சேர்க்கப்பட்டு வெவ்வேறு பிரிவுகளில் இணைக்கப்படும்.
ஏற்கனவே பிரதான சுற்றுக்குத் தகுதி
பெற்றுள்ள அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் கொல்கத்தா நைற் ரைடர்ஸ், டொல்பின்ஸ், பேர்த் ஸ்கோர்சர்ஸ்,
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேப் கோப்ராஸ், ஹோபாரட் ஹரிக்கேன்ஸ், பார்படோஸ் ட்ரிடன்ஸ், அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடரில் தங்கள் நாடுகளின் உள்ளூர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாது ஐ.பி.எல். அணிகளுக்காக 8 வீரர்கள் விளையாடுகின்றனர். இதற்காக குறித்த ஐ.பி.எல். அணிகள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை அந்த நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு வழங்குகின்றன.
இலங்கையின் லசித் மலிங்க
சௌதேர்ன் எக்ஸ்பிரஸ் அணியையும், நியூசிலாந்தின் கோரி அண்டர்சன் நொதேர்ன் நைற்ஸ் அணியையும், மேற்கிந்தியத் தீவுகளின் கிரன் பொல்லார்ட் பார்படோஸ் அணியையும் புறக்கணித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகின்றனர்.
இதேபோன்று அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜ் பெய்லி, ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியையும் தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர், டொல்பின்ஸ் அணியையும் புறந்தள்ளி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும், பட் கம்மின்ஸ், பேர்த் ஸ்கோர்சர்ஸ் அணியையும் தென்னாபிரிக்காவின் ஜக்ஸ் கலிஸ், கேப் கோப்ராஸ் அணியையும் புறக்கணித்து கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணியிலும் விளையாடவுள்ளனர்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் ஸ்மித் பார்படோஸ் அணியை விட்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அணிகளின் விவரம்:
பிரதான சுற்றுக்கு
தகுதிபெற்ற அணிகள்
சென்னை சுப்பர் கிங்ஸ்: டோனி, சுரேஸ் ரெய்னா, அஷிஸ் நெஹ்ரா, மிதுன் மங்காஸ், அஸ்வின், ஈஸ்வர் பண்டே, பவான் நெகி, ரவீந்திர ஜடேஜா, மோகித் சர்மா, டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ஜோன் ஹாஸ்டிங்ஸ், பிரண்டன் மக்கலம், சாமுவேல் பத்ரி,
டூ பிளஸிஸ்.
கொல்கத்தா நைற் ரைடர்ஸ்: கௌதம் கம்பீர், யூசுப் பதான், றொபின் உத்தப்பா, பியூஸ் சாவ்லா, வினய் குமார், உமேஷ் யாதவ், மனிஸ் பண்டே, சூரியகுமார் யாதவ், குல்டீப் யாதவ், சுனில் நரைன், ஜக்ஸ் கலிஸ், ரென்
டொசாற்ரே, மோர்னே மோர்கல், பட் கம்மின்ஸ், அன்ட்ரே ரஸல்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஜோர்ஜ் பெய்லி, திஸார பெரேரா, மிற்சல் ஜோன்சன், கிளென் மெக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஸர் பட்டேல், கரன்வீர்
சிங், பாலாஜி, மனன் வோக்ரா, மன்டீப் சிங், ரிஷி தவான், வீரேந்தர் சேவாக், விரித்திமன் ஷா, அனுரீத் சிங், பர்விந்தர் அவானா.
பேர்த் ஸ்கோர்சர்ஸ்: அஸரன் அகர், யசிர் அரபாத், மிற்சல் பீர், கமரொன் வன்குறோப்ற்,
ஜசோன் டிபரென்ட்ரொப், ஹில்டன் கார்ட்றைற், நதன் கோல்டர் நைல், பிராட் கொக், சைமன் மக்கின், மிச்சல் மார்ஷ், ஜோல் பரிஸ், கரிக் சைமன்ஸ், அஸ்ரன் ரேர்னர், அடம் வோக்ஸ் ஷாம் வைற்மன்
கேப் கோப்ராஸ்: ஹசிம் ஆம்லா, டுமினி, ஜஸ்ரின் கெம்ப், ரொறி க்ளின்வெல்ட், சார்ல் லாங்வெல்ட்,
றிச்சர்ட் லெவி, அவிவ் மிகிஜிமா, ஜஸ்ரின் ஒன்ரோங், ரொபின் பீற்றர்சன், வேர்னொன் பிலாண்டர், டேன் பிடெற், ஷக்கலி குவாவ், ஒம்பில் ரமிலியா, ஸ்ரின் என ஷில், டேன் விலாஸ்
ஹேபார்ட் ஹரிக்கேன்ஸ்: ரிம் பைன், ஜோன் வெல்ஸ், எவன் குல்ப்ஸ், சேவியர் டொஹேர்டி, பென் ஹில்பென்கஸ், டோம் மிற்சல், ஷாம் ரெயின்பேர்ட், ட்ரவிஸ் பேர்ட், டோக் போலிஞ்சர், ஐடென் பிலிஷாட், கமரூன் போய்ச், ஜோ மெனின், பென் லாகூலின், பென் டங், சொஹைப் மலிக்
டொல்பின்ஸ்: டரின் ஸ்மித், டரின் டுபாவிலோன், கோடி செற்றி, வௌன் வான் ஜார்ஸ்வ்லட், கைலிகல் ஷொன்டோ, ரொப்பி பிராளிங், மோர்னி வான் வைக், யெல் அப்பொட், கிரைக் அலெக்ஸாண்டர், ஜொனதன் வண்டையர், கேசவ் மகாராஜ், பிரென்லான் சுப்ராயன், கமரொன் டெல்போர்ட், அன்டில் பெலுக்வாயோ, சிபொனொலோ மகான்யா
பார்படோஸ் ட்ரினிடாட்: ஷேன் டோவ்றிச், ஜீவன் மெண்டிஸ், ஜசோன் கோல்டர், அஷ்லி நர்ஸ், ஜொனதன் கார்டர், நெய்ல் மக்கன்ஷி, அகில் ஹெசைன், ரவி ராம்பவுல், ரயாட் எம்ரிட், ராய்மோன் ரெபியர், கெய்ல் மாயெர்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், ஜேம்ஸ் பிராங்ளின், எல்டன் சிகும்புரா, டில்ஷான் முனவீர.
தகுதிகாண் சுற்றில்
விளையாடும் அணிகள்
மும்பை இந்தியன்ஸ்: ரோகித்
சர்மா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, பிராக்ஜன் ஒஜா, பிரவீன் குமார், ஆதித்யா தரே, ஜலேஜ் செஷெனா, ஜஸ்பிரிட் பும்ரா, கோபால், மைக்கல் ஹசி, கிரன் பொலார்ட், கோரி அண்டர்சன்,
லசித் மலிங்க, டி லாங், சைமன்ஸ்.
சௌதேர்ன் எக்ஸ்பிரஸ்: குசல் பெரேரா, தனுஸ்க குணதிலக, ஏஞ்சலோ பெரேரா, ஜெகான் முபாரக், நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, இசான் ஜெயரட்ண, பர்வேஸ் மஹரூப், கௌசன் மடுசாங்க, யசோத லங்கா, சரித் ஜயம்போதி, சசித் பத்திரண, சந்தகன் லக்சன், திலகரட்ண டில்ஷான்.
நொதேர்ன் நைற்ஸ்: இஷ் சோதி, ஜோனோ போல்ட், பிரட் வில்சன், கேன் வில்லியம்சன், டானியல் பிளின், வட்லிங், கிரஹெம் அல்ட்ரிஜ், அன்ரன் டெவிச், ரிம் சௌதி, ஸ்கொட் குக்கேலின்ஜ், டரில் மிற்சல், டானியேல் ஹரிஸ், ஸகொட் ஸ்ரைறிஸ், ட்ரென்ட் போல்ட் டானியல் விற்றோரி
லாகூர் லயன்ஸ்: மொஹமட் ஹபீஸ், அஹமட் ஷெஷாட், உமர் சித்திக் கான், மொஹமட் உமர் அக்மல், நசீர் ஜம்செட், மொஹமட் சல்மன் அலி, ஆசிப் ராஷா, முஸ்தபா இக்பால், வாகாப் ரியாஸ், ஐஷாஷ் சீமா, இம்ரான் அலி, சாட் நசீம், அத்னன் ரசூல், மொஹமட் சயீட், அலி மன்சூர்
தகுதிகாண் சுற்று
திகதி நேரம் மோதும் அணிகள்
செப். 13 சனி 16.00 : நொதேர்ன் நைற்ஸ் - சௌதேர்ன்
20.00 : மும்பை இந்தியன்ஸ் - லாகூர்
செப். 14 ஞாயிறு 16.00 : நொதேர்ன் நைற்ஸ் - லாகூர்
20.00 : மும்பை இந்தியன்ஸ் - சௌதேர்ன்
செப். 16 செவ்வாய் 16.00 : சௌதேர்ன் எக்ஸ்பிரஸ் - லாகூர்
20.00 : மும்பை இந்தியன்ஸ் - நொதேர்ன்
பிரதான சுற்று
செப். 17 புதன் 20.00 : கொல்கத்தா - சென்னை
செப். 18 வியாழன் 20.00 : பஞ்சாப் - ஹோபார்ட்
செப். 19 வெள்ளி 20.00 : கேப் கோப்ரா - ‘பி’ தகுதி அணி
செப். 20 சனி 16.00: டொல்பின்ஸ் - பேர்த்
செப். 20 சனி 20.00 : பஞ்சாப் - பார்படோஸ்
செப். 21 ஞாயிறு 16.00 : கேப் கோப்ராஸ் - ஹோபார்ட்
செப். 21 ஞாயிறு 20.00 : கொல்கத்தா - ‘ஏ’ தகுதி அணி
செப். 22 திங்கள் 20.00 : டொல்பின்ஸ் - சென்னை
செப். 23 செவ்வாய் 20.00 : ஹோபார்ட் - ‘பி’ தகுதி அணி
செப். 24 புதன் 20.00 : கொல்கத்தா - பேர்த்
செப். 25 வியாழன் 20.00 : சென்னை - ‘ஏ’ தகுதி அணி
செப். 26 வெள்ளி 16.00 : பார்படோஸ் - கேப் கோப்ராஸ்
செப். 26 வெள்ளி 20.00 : பஞ்சாப் - ‘பி’ தகுதி அணி
செப். 27 சனி 16.00 : டொல்பின்ஸ் - ‘ஏ’ தகுதி அணி
செப். 27 சனி 20.00 : பேர்த் - சென்னை
செப். 28 ஞாயிறு 16.00 : பார்படோஸ் - ஹோபார்ட்
செப். 28 ஞாயிறு 20.00 : பஞ்சாப் - கேப் கோப்ராஸ்
செப். 29 திங்கள் 20.00 : கொல்கத்தா - டொல்பின்ஸ்
செப். 30 செவ்வாய் 16.00 : பேர்த் - ‘ஏ’ தகுதி அணி
செப். 30 செவ்வாய் 16.00 : பார்படோஸ் - ‘பி’ தகுதி அணி
ஒக். 02 வியாழன் 16.00 : முதலாவது அரையிறுதி
ஒக். 02 வியாழன் 20.00 : இரண்டாவது அரையிறுதி
ஒக். 04 சனி 20.00 : இறுதியாட்டம்
No comments:
Post a Comment