எஸ்.ஜெயானந்தன்
வரலாற்று சிறப்புமிகு டெஸ்ட் வீரர்
கிரிக்கெட் போட்டிகளுள் மிகவும் பழமை வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமான ஒன்றாக விளங்குவது டெஸ்ட் போட்டிகள் ஆகும்.
இத்தகைய சிறப்பு மிக்க போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவரையும் காலம் மறப்பதில்லை. அதேபோல ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களதும் செயற்பாடுகளையும் அவர்களுக்குரிய கௌரவங்களையும் சொல்லித்தான் தெரியவேண்டியதும் இல்லை.
இத்தகைய கௌரவத்தை பெறுவதற்கென்றே 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி தென்னாபிரிக்காவில் பிறந்தவர்தான் நோமன் கோர்டன்.
இவர், தனது சிறப்பான கிரிக்கெட் ஆட்டம் காரணமாக 1933ஆம் ஆண்டு முதல், முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பல வாய்ப்புகளைப் பெற்றார். இதன் பரிணாம வளர்ச்சியாக தென்னாபிரிக்க தேசிய அணியிலும் இடம்பிடித்தார்.
1938-1939ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 தொடக்கம் 27ஆம் திகதிவரை ஜோகனஸ் பேர்க்கில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் அறிமுகமானார் கோர்டன்.
இவர் ஆடிய அந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்கா சார்பாக, ஐந்து வீரர்கள் (கோர்டன் உட்பட) அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர். அதேவேளை, இங்கிலாந்து அணியிலும் கூட 3 வீரர்கள் அறிமுகமாகினர்.
ஓவர் ஒன்றுக்கு 8 பந்துகள் வீதம் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளரான கோர்டனுக்கும் பந்துவீசும் வாய்ப்புக்கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் அவர் 33.4 ஓவர்கள் வீசி 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு உத்வேகத்தைக் கொடுத்தார். அதேபோல, இரண்டாவது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இந்த ஆட்டத்தில் அவரது துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்புக்கிடைக்கவில்லை.
நான்கு நாட்கள் மாத்திரமே நடைபெற்ற இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டம் 24-28ஆம் திகதி வரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் 25ஆம் திகதி ஓய்வு நாளாக வழங்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
1938 டிசம்பர் 31- 1939 ஜனவரி 04ஆம் திகதி வரை (முதலாம் திகதி ஓய்வுநாள்) கேப்டவுணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென்னாபிரிக்கா ஓர் இன்னிங்ஸ் மாத்திரமே களத்தடுப்பில் ஈடுபட நேர்ந்தமையால், கோர்டன் முதல் இன்னிங்ஸில் கிடைத்த வாய்ப்பில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். துடுப்பெடுத்தாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
1939ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-23ஆம் திகதி வரை டர்பனில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்திலும் (22ஆம் திகதி ஓய்வு நாள்) கோர்டனுக்கு ஓர் இன்னிங்ஸிலேயே பந்துவீச வாய்ப்புக் கிடைத்தது. இதில் அவர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஓர் ஓட்டமும் இரண்டாவது இன்னிங்ஸில் ஓட்டம் எதையும் பெறாமலும் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்து.
1939ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 தொடக்கம் 22ஆம் திகதி வரை (19ஆம் திகதி ஓய்வு நாள்) நடைபெற்ற நான்காவது ஆட்டத்தின், முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கோர்டன் கைப்பற்றினார். துடுப்பெடுத்தாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 தொடக்கம் 14ஆம் திகதி வரை (மூன்றாம் மற்றும் ஒன்பதாம் நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது) நடைபெற்ற ஐந்தாவது போட்டி 10 நாட்கள் நடைபெற்று வரலாற்றிலும் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்தது.
இந்தப் போட்டியின் கோர்டன் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட கடைசி விக்கெட்டாகக் களமிறங்கியபோதும் எந்தவொரு பந்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 37 ஓவர்கள் பந்துவீசியபோதும் கோர்டனால் விக்கெட் எதையும் கைப்பற்றமுடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் 55ஆவது ஓவரின் 3ஆவது பந்தை வீச கோர்டன் தயாராக இருந்த போது, இதற்கு மேல் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்பது உணரப்பட்டு ஆட்டம் சமநிலையில் முடிக்கப்பட்டது.
அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்தத் தொடரில் கோர்டன் 20 விக்கெட்டுகளை(சரா சரி 40.4) வீழ்த்தியிருந்தார். 8 ஓட்டங்களை மாத்திரமே மொத்தமாக இவரால் பெறமுடிந்தது
இந்தத் தொடரின் ஐந்தாவது ஆட்டமே கோர்டனின் கடைசி ஆட்டமாகவும் அமைந்தது.
இரண்டாம் உலகப்போர் (1939 செப்டெம்பர் 1 - 1945 செப்டெம்பர் 2) அவரது கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக டெஸ்ட் விளையாடிய வீரர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவர் இவர்தான். அது மாத்திரமின்றி வாழ்க்கையிலும் சதமடித்த முதல் டெஸ்ட் வீரர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு.இவர் 2011ஆம் ஆண்டு தனது 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார்.
இத்தகைய சிறப்பு மிக்க - பழைமை வாய்ந்த வீரரான கோர்டன், கடந்த 2ஆம் திகதி காலமானார். இவர் இறக்கும்போது இவரது வயது 103ஆகும்.
வரலாற்றுப் பெருமை மிக்க டெஸ்ட் கிரிக்கெட்டால் பெருமை பெற்ற இவர், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் பெருமை சேர்த்துச் சென்றுள்ளார்.
கோர்டனின் மறைவை தொடர்ந்து, தற்போதுள்ள வயதில் முதிர்ந்த டெஸ்ட் வீரராக அவரது சகநாட்டவரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லின்ட்சே டக்கெட் பெற்றுள்ளார். அவரது தற்போதைய வயது 95 ஆகும்.
........
முழுப்பெயர் - நோமன் கோர்டன்
பிறப்பு - 6 ஆகஸ்ட் 1911 (அகவை 103)
தென்னாப்பிரிக்கா
வகை - பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை - வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை - வலதுகை வேகப்பந்து
அறிமுகம் - 24-27 டிச.1938, ஜோகனஸ்பேர்க்
கடைசி ஆட்டம் - 3-14 மார்ச் 1939, டர்பன்
தரவுகள்
சர்வதேச முதல்தர
ஆட்டங்கள் 5 29
ஓட்டங்கள் 8 109
துடுப்பாட்ட சராசரி 2.00 5.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 7* 20
பந்துவீச்சுகள் 1966 7173
விக்கெட்டுகள் 20 126
பந்துவீச்சு சராசரி 40.35 22.24
5 விக்/இன்னிங்ஸ் 2 8
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 5/103 6/61
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 8/-
........
கூடுதலான வயதுடன் உயிர் வாழும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்
வீரர் நாடு பிறந்தது அறிமுகம் கடைசி வயது
லின்ட்சே டக்கெட் தெ.ஆ. 6 பெப். 1919 7 ஜூன் 1947 5 மார்ச் 1949 95
அண்டி கன்ரெயும் மே.இ.தீ. 22 ஜன. 1921 11 பெப். 1948 16 பெப். 1948 93
ஆர்தர் மோரிஸ் ஆஸி. 19 ஜன. 1922 29 நவ. 1946 11 ஜூன் 1955 92
ஜோன் வாட்கின்ஸ் தெ.ஆ. 10 ஏப். 1923 24 டிச. 1949 5 ஜன. 1957 91
டான் ஸ்மித் இங்கிலாந்து 14 ஜூன் 1923 20 ஜூன் 1957 27 ஜூலை 1957 91
பிரெட் ரிட்வேய் இங்கிலாந்து 10 ஆக. 1923 2 நவ. 1951 10 பெப். 1952 91
பொப் அப்லேயார்ட் இங்கிலாந்து 27 ஜூன் 1924 5 ஜூலை 1954 12 ஜூன் 1956 90
.......
கூடுதலான வயதுவரை வாழ்ந்த டெஸ்ட் வீரர்கள்
வீரர் நாடு பிறந்தது அறிமுகம் கடைசி இறந்தது வயது
நார்மன் கோர்டன் தெ.ஆ. 6 பெப். 1911 24 டிச. 1938 14 மார்ச் 1939 2 செப். 2014 103
எரிக் திண்டில் நியூசிலாந்து 18 டிச. 1910 26 ஜூன் 1937 25 மார்ச் 1947 1 ஆக. 2010 100
பிரான்சிஸ் இங்கிலாந்து 9 ஏப். 1848 2 ஜன. 1879 4 ஜன. 1879 27 பெப். 1947 98
ஜாக் கெர், நியூசிலாந்து 28 டிச. 1910 27 ஜூன் 1931 27 ஜூலை 1937 27 மே 2007 96
வில்பிரட் ரோட்ஸ் இங்கிலாந்து 29 ஒக். 1877 1 ஜூன் 1899 12 ஏப். 1930 8 ஜூலை 1973 95
பில் பிரவுன் ஆஸ்திரேலியா 31 ஜூலை1912 8 ஜூன் 1934 29 ஜூன் 1948 16 மார்ச் 2008 95
லிண்ட்சே டுச்கேத்ட் தெ.ஆ. 6 பெப். 1919 7 ஜூன் 1947 9 மார்ச் 1949 வாழ்கிறார் 95
லிண்ட்சே வெயர் நியூசிலாந்து 2 ஜூன் 1908 24 ஜன 1930 17 ஆக. 1937 31 ஒக். 2003 95
சிட்னி பார்ன்ஸ் இங்கிலாந்து 19 ஏப். 1873 13 டிச. 1901 18 பெப். 1914 26 டிச. 1967 94
.......................
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பம்
சீனத்தைபேயை எதிர்கொள்கிறது இலங்கை
சிங்கப்பூரில் இன்றையதினம் ஆரம்பிக்கும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி, தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் சீனத் தைபேயை எதிர்கொள்கிறது. நடப்பு சம்பியனாகக் களமிறங்கும் போட்டியை நடத்தும் நாடான சிங் கப்பூர் தொடரின் முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடர் இம்முறை முன்கூட்டியே நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதன்படி சிங்கப்பூரில் இன்றையதினம் ஆரம்ப விழாக்களுடன் காலை 9.15 மணியளவில் (இ.நே.) ஆரம்பிக்கும் இத்தொடர், எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைபெறும்.
இத்தொடரில் மொத்தம் 10 ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு (ஏ, பி) பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் வீதம் இடம்பிடித்துள்ளன.
சிங்கப்பூர் (தரவரிசை - 1), கொங்கொங் (4), இந்தியா (5), ஜப்பான் (7), வியட்நாம் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், இலங்கை (2), மலேஷியா(3), புரூனே (6), சீனத்தைபே, மியான்மார் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம்பிடித்துள்ள அணிகள் ஒவ்வொன்றும், தத்தமது பிரிவிலுள்ள ஒவ்வொரு அணியுடனும் தலா ஒருமுறை மோதும். பின்னர் அவை பிடிக்கும் இடங்களைப் பொறுத்து ஏனைய நிலைகளுக்கான (1 தொடக்கம் 10 வரையான இடங்களுக்கான) போட்டிகள் நடைபெறும்.
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரைப் பொறுத்தவரையில் இலங்கை அணியின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
1985ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி, 1989, 1997, 2001 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்று, அதிக தடவைகள் சம்பியனான அணி என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அடுத்ததாக சிங்கப்பூர் அணி இரண்டு தடவைகள் (1985, 2012) வென்றுள்ளது. மலேசியா (1985), கொங்கொங் (1993) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இவ்வாறானதொரு கடந்தகாலப் பெறுபேறுகளுடன் ஆரம்பிக்கும் 9ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரை வசப்படுத்துவதற்கான போட்டியில் இலங்கை, சிங்கப்பூர் அணிகளுக்கிடையிலேயே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டித் தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி, 07.09.2014 (பி.ப. 4.30 இலங்கை நேரம்) இன்று சீனத்தைபேயையும், 09.09.2014 (மு.ப. 10.30 இ.நே.) அன்று மியான் மரையும், 10.09.2014 (பி.ப. 02.30 இ.நே.)புருனேயையும், 11.09.2014 (பி.ப. 2.30 இ.நே.) அன்று மலேஷியாவையும் எதிர்கொள்கின்றது.
சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கைக் அணியின் விவரம் வருமாறு-
சசிகலா சமரசிங்க (அணித்தலைவி), கயானி திசாநாயக்க (உப அணித்தலைவி), திலானி வத்தேகெதர, தீபிகா அபேகோன், காஞ்சனா ஜயவீர, சத்துரங்கனி, ஜயசூரிய தர்ஷிகா அபேவிக்ரம, தர்ஷினி
சிவலிங்கம், டிஷாலா அலீகம, குமரினிசில்வா, மரீஷா பெர்ணான்டோ, தௌசலி ராஜபக்ஷ,
No comments:
Post a Comment