வாழ்வா, சாவா?
பாகிஸ்தான், அயர்லாந்து, மே.இ.தீவுகளுக்கு இன்று முக்கிய நாள்
11ஆவது உலகக் கிண்ணத் தொடரிலில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஸ்கொட்லாந்து அணியை அவுஸ்திரேலியாவும், சிம்பாப்வே அணியை இந்தியாவும் வெற்றிபெற்றன.
இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் அவுஸ்திரேலியா - ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலிய அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றபோதும், முதலில் களத்தடுப்பையே தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 25.4ஆவது ஓவரில் கடைசி விக்கெட்டையும் பறிகொடுத்து 130 ஓட்டங்களையே சேர்த்தது. அந்த அணி சார்பாக ஆகக்கூடுதலாக மசான் 40 ஓட்டங்களைச் சேர்த்தார்.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் கலக்கிய ஸ்ராக் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் வெற்றியிலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களைச் சேர்த்து 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரரான ஸ்ராக் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை நேற்றுக் காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய மற்றொரு ஆட்டத்தில், நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, ரெய்லரின் (138) அதிரடிச் சதம் கைகொடுக்க 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 287 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 22.4 ஓவர்களில் 92 ஓட்டங்களுள் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தடுமாறியது.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த டோனி-ரெய்னா ஜோடி கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களைச் சேர்த்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ரெய்னா 110 ஓட்டங்களுடனும், டோனி 85 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
ஆட்டநாயகனாக இந்தியாவின் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்துடன், சதமடித்த சிம்பாப்வேயின் ரெய்லர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
நேற்றுவரை நடைபெற்ற இரு ஆட்டங்களின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில், நியூஸிலாந்து (12 புள்ளிகள்), அவுஸ்திரேலியா (9), இலங்கை (8) மற்றும் பங்களாதேஷ் (7) அணிகள் முறையே நான்கு இடங்களைப் பிடித்ததன் மூலம் காலிறுதிக்குத் தகுதிபெற்றன.
‘பி’ பிரிவில், இந்தியா (12), தென்னாபிரிக்கா (8) அணிகள் காலிறுதியை உறுதிசெய்துவிட்டன. அடுத்த இரண்டு இடங்களுக்கு பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் போட்டி போடுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணியையும், மேற்கிந்தியத் தீவுகள் - ஐ.அ.இராச்சிய அணியையும் எதிர்த்து மோதுகின்றன. இந்தப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே காலிறுதிக்கு முன்னேறும் அடுத்த இரண்டு அணிகள் தெரிவாகும். (கீழே தரப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலை பார்த்தால் நீங்களே யூகித்துக்கொள்ளலாம்)
பாகிஸ்தான் (-0.194), அயர்லாந்து (-1.014) அணிகள் தலா 6 புள்ளிகளுடனும், மேற்கிந்தியத் தீவுகள் (-0.511) 4 புள்ளியுடனும் உள்ளன. இன்றைய ஆட்டங்களில் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வென்றால் பாகிஸ்தான் தகுதிபெறும். அயர்லாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் சமபுள்ளிகளைப் பெறும். ஓட்ட சராசரி அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி காலிறுதிக்குள் நுழையும்.
அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றி பெற்றால் அயர்லாந்து தகுதிபெறும். பின்னர் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே ஓட்டசராகரி கணக்கிடப்படும்.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் வெற்றி பெற்றால் பாகிஸ்தானும், அயர்லாந்து தகுதி பெறும். பாகிஸ்தான்-அயர்லாந்து மோதும் ஆட்டம் மழையால் ரத்தானாலே இரு அணிகளும் காலிறுதிக்கு நுழைந்துவிடும். மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றாலும் வெளியேறும் நிலை ஏற்படும்.
வெஸ்ட்இண்டீஸ் அணி தென்ஆப்பிரிக்கா, இந்தியா, அயர்லாந்திடம் தோற்றது. பாகிஸ்தான், ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடி வெஸ்ட்இண்டீசுக்கு உள்ளது. அதிர்ச்சிகரமாக தோற்றால் வெளியேறிவிடும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்துவது மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கடினமாக இருக்காது. எனினும், பாரியளவிலான வெற்றி வித்தியாசம்தான் முக்கியம். இந்த கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாகவுள்ளமை அந்த அணிக்குப் பின்னடைவே.

No comments:
Post a Comment