எஸ். ஜெயானந்தன்
சாதனைக்கான போட்டி
‘பிபா’ நடத்தும் பெண்களுக்கான ஏழாவது உதைபந்தாட்டத் தொடர் கனடாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது. ஜூலை 5ஆம் திகதி நடைபெறும் இறுதியாட்டத்துடன் நிறைவுபெறும்.ஒவ்வொரு போட்டியிலும் எந்த எந்த அணிகள் வெற்றி பெறுகின்றன என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள் ஒருபுறம் நகர, மறுபுறம் வீராங்கனைகள் தமக்குள் பல்வேறுபட்ட மட்டங்களில் போட்டி போடவும் தவறவில்லை.
அந்த வரிசையில், கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெண்கள் உலகக் கிண்ண வரலாற்றில் புதியதொரு சாதனை பாதிவாகியுள்ளது.
குழு நிலை ஆட்டங்களில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்திருந்த பிரேஸில் அணி, தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
பிரேசில் போட்ட இரு கோல்களுள்
2ஆவது கோலை பிரேசில் முன்னணி வீராங்கனையான மார்ட்டா போட்டார். பிரேசில் அணிக்குக் கிடைத்த
‘பெனால்டி’ வாய்ப்பினை அவர் கோலக்கினார். இது உலக கிண்ண வரலாற்றில் அவரது 15ஆவது கோலாகும்.
இந்தப் கோலைப் போட்டதன் மூலம் பெண்கள் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவரான ஜேர்மனியின் பிர்ஜிட் பிரின்சின் சாதனையை முறியடித்தார்.
ஏற்கனவே தலா 14 கோல்களுடன் மார்ட்டா மற்றும் பிர்ஜிட் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர். இந்நிலையிலேயே பிரேசில் அணி எதிர்கொண்ட முதலாவது போட்டியிலேயே
சாதனை படைக்கும் வாய்ப்ப்பினை அந்த அணியின் நட்சத்திர வீராங்கனையான மார்ட்டா தனக்குச் சாதகமாக்கி சாதனை படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் மூலம் அதிக கோல்களை அடித்த வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்திருக்கின்றபோதும், இவருக்குப் போட்டியாக நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள அமெரிக்காவின் அப்பி வாம்பச் விளங்குகிறார். இவர் இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் 13 கோல்களைப் போட்டு, அதிக கோல்களைப் போட்டவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டடோர்
வீராங்கனை நாடு கோ. ப.போ. ப.ஆ.
1. மார்ட்டா பிரேசில் 15 15 2003, 07, 11, 15*
2. பிரின்ஸ் ஜேர்மனி 14 24 1995, 99, 2003, 07, 11
3. அப்பி அமெரிக்கா 13 19 2003, 07, 11, 15*
4. அகேர்ஸ் அமெரிக்கா 12 13 1991, 95, 99
5. சன்வென் சீனா 11 20 1991, 95, 99, 2003
பெட்டினா ஜேர்மனி 11 22 1991, 95, 99, 2003
No comments:
Post a Comment