விளையாட்டு உலகில் பல்வேறுபட்ட துறைகளில் பல்வேறுபட்ட
சாதனைகள் படைக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் வெவ்வொரு வகைகளில் உயர் நிலை வகிக்கின்றனர். விளையாட்டு மூலம் நிகழ்த்தும் இத்தகைய சாதனைகளுக்கு அப்பாலும் உயர்ந்து நிற்கவேண்டின், அவர்கள் தத்தமது கள நிலைகளில் ஒழுக்க நிலைகளையும் கடைப்பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.
இத்தகைய நிலையை அடைந்தவர்களுள் நமக்கு மிகவும் அருகில் - பரீட்சயமானவர் என்றால் அவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைக் குறிப்பிடலாம். அத்தகையதோர் இடத்தில் அவரது சக காலத்திலேயே வைத்துப் பார்க்கப்படுவர் என்றால் அவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்கார மாத்திரமே.
கிரிக்கெட்டை விளையாட்டாக ஆடியது மாத்திரமின்றி நாட்டுக்காகவும் திறம்பட செயற்பட்ட வீரரான
சங்கக்கார, இலங்கை அணியை வழி நடத்திய காலத்திலும் சரி, சாதாரண வீரராகக் களத்தில் இருந்தபோதும் சரி தனது திறமையை எவ்வளவு உச்சக்கட்டில் வைத்திருந்தாரோ அதே அளவுக்கு ஒழுக்கத்தையும் பின்பற்றத் தவறவில்லை.
இத்தகைய வீரர் ஒருவரை இலங்கை அணி இன்னும் சில மணி நேரங்களில் இழந்து விடப்போகிறது என்றால் அது சொல்லிலடங்கா இழப்பாகும்.
1977ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 27ஆம் திகதி மாத்தளையில் பிறந்த சங்கக்கார, 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி காலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.
பின்னர், அதே ஆண்டே ஜூலை 20 ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் டெஸ்ட் அரங்கினுள் புகுந்தார்.
அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இருபது-20 போட்டிகளிலும் 2006ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி அறிமுகமானார்.
இருபது-20 போட்டிகளைப் பொறுத்தவரையில் அவர் 56 போட்டிகளில் விளையாடி1,382 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இப்போட்டிகளிலிருந்து அவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்தில் வெற்றிபெற்று இலங்கை அணிக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்த கையோடு தனது சகாவான மஹேலவுடன் இணைந்து ஓய்வுபெற்றார்.
பின்னர் இந்த வருடம் உலகக் கிண்ணத் போட்டிகளில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் 2015 மார்ச் 18ஆம் திகதி நடைபெற்ற காலிறுதியாட்டத்துடன் விடைபெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் தொடர்ந்து விளையாடி வந்த
சங்கக்கார, தற்போது நடைபெற்று வரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி விட்டு ஓய்வுபெறவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
இதன்படி நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியை வெற்றியுடன் முடித்த அவர், தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறார். கொழும்பு சரா ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் நடைபெற்றுவரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 393 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, நேற்று மதியம் வரையான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ஓட்டங்களை கடந்திருந்தது. இதில் நேற்றுமுன்தினம் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் நாளில் களத்தடுப்பில் ஈடுபட சங்கக்கார மைதானத்திற்குள் வந்தபோது வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். இதில் போட்டி நடுவர்களான அவுஸ்திரேலியாவின் ஆக்ஜென்போர்டும் டியூக்கரும் கூட கலந்து கொண்டு சங்கக்காரவுக்கு மரியாதை செய்தனர்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு நடுவர்களிடம் இத்தகையை மரியாதையைப் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர்
சங்கக்கார மட்டும்தான்.
இன்று ஆட்டத்தின் நான்காவது நாளாகவும் நாளையதினம் ஐந்தாவது நாளாகும் ஆட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் குமார் சங்கக்காரவுக்கு துடுப்பெடுத்தாடச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அதுவே அவரது கடைத் துடுப்பாட்டமாக அமையும். இல்லையோல் நேற்றுமுன்தினம் ஆடியதே அவரது கடைசி துடுப்பாட்டமாக அமையும்.
டெஸ்ட் போட்டிகளில் அவரது புள்ளி விவரம் (தற்போது நடைபெற்று வரும் போட்டியைத் தவிர்த்து) குறித்துப் பார்க்கையில்,
133 போட்டிகளுக்காக 231 இன்னிங்களில் துடுப்பெடுத்தாடி 12,350 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதற்குள் 38 சதங்களும் 52 அரைச் சதங்களும் அடங்கும். ஓர் இன்னிங்ஸில் சிறந்த பெறுபேறாக 319 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
டெஸ்டில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ள 11 வீரர்களுள் ஐந்தாவது இடத்தில் உள்ள இவர், இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் கடந்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் மஹேல (11814) உள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரர் ஒருவரின் இழப்பு இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக எந்த வீரர் அந்த இடத்தை நிரப்ப்பபோகிறார் என்பதே கேள்வி.
எது எப்படியோ சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முற்று முழுதாக விடை கொடுக்கும் சங்க்ககாரவை நாமும் வாழ்த்தி அனுப்புவோமாக...

No comments:
Post a Comment