எஸ்.ஜெயானந்தன்
ஆடிய ஆட்டம் என்ன?விளையாட்டைப் பொறுத்தவரையில் வெற்றி d தோல்வி என்பது சாதாரண ஒரு நிகழ்வு. அந்த வகையில் சில சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுகளில் வெற்றி d தோல்வி என்பனவற்றுக்கு அப்பாலான முடிவுகளும் கிட்டத்தான் செய்கின்றன.
அதாவது, போட்டி ஒன்று சமனிலையில் முடிகின்றமை முடிவின்றி முடிகின்றமை என்பவற்றைக் குறிப்பிடலாம். இது கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி நிகழ்வதுண்டு. அதுவும் டெஸ்ட் போட்டிகள் என்றால் வெற்றி d தோல்வி என்பவற்றோடு சமனிலையில் முடியும் தருணங்களும் நிறையவே உள்ளன.
கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி என்பதை கிரிக்கெட் விளையாடும் நாடுகள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதுமுண்டு. கடுமையாக எடுத்துக்கொள்வதும் உண்டு.
அதே வேளை, குறித்த போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மீது அதிக விமர்சனங்களை வெளிப்படுத்தி அவர்களது திறன்களுக்கு சவால்விடுகின்ற அதேவேளை, அவர்களது எதிர் காலத்தையும் கேள்விக் குள்ளாக்கு வ தும் உண்டு.
அந்த வகையில் இத்தகைய விமர்சனங்களுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக இந்திய அணியைக் குறிப்பிடலாம்.
கிரிக்கெட் விளையாடும் எத்தனையோ அணிகள் உள்ளன. அவை தோற்கும்போது அந்த அணிகளுக்கு எதிரான விமர்சனங்கள் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன. எனினும், இந்திய அணி மீது எழுகின்ற விமர்சனங்களோ பல மடங்கு.
உதாரணமாக சச்சின் டெண்டுல்கரை இந்திய ரசிகர்கள், கிரிக்கெட்டின் கடவுள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால், இவர் இந்திய அணியில் இடம்பிடத்திருந்த காலகட்டத்தில் அந்த அணி தோல்விகளை எதிர்கொள்ளும்போதெல்லாம் அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழத்தவறவில்லை. அத்துடன், தற்போதைய இந்திய அணியின் தலைவரான டோனி அந்த அணிக்காக உலகக் கிண்ணம் உட்பட பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக்கொடுத்தபோதெல்லாம் அவர் புகழ்பாடியோர் இந்திய அணி சொதப்பும்போது கடுமையாக எதிர்க்கின்றன.
இத்தகைய செயற்பாடுகளில் ரசிகர்கள் மாத்திரமின்றி முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூட இந்திய அணியினரை கடுமையாக விமர்சிக்கத்தான் செய்கின்றனர்.
அண்மையில் நியூஸிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களைக் கோட்டைவிட்டிருந்தது. இதையடுத்து இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
"இந்திய அணி சொந்த மண்ணில் மாத்திரம்தான் புலி, வெளியே சென்றால் அது கிலி கொள்கிறது' என்ற தொனியில் விமர்சனங்கள் வழமைபோல எழத்தொடங்கியுள்ளன. அதேவேளை, நேற்றுடன் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் தோற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து அந்த அணி மீதான விமர்சனங்கள் மேலும் பல் மடங்காக அதிகரித்துள்ளன. அந்த வீரர்களின் திறமைகளை விடுத்து அவர்களது பலவீனங்களை அதிகமாகச் சுட்டிக்காட்டுகின்ற நிலைமை மேலோங்கிக் காணப்படுகிறது.
தோல்விகள் என்பது ஒவ்வொரு அணிக்கும் ஏற்படுகின்ற சாதாரண நிகழ்வு. ஆனால் இந்திய அணி தோற்றால் மாத்திரம் அதிகமான விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது.
இந்திய அணி வெளிநாடுகளில் தோற்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் அடிக்கடி வந்துபோகின்ற நிலையில், உண்மையிலேயே இந்திய அணி மாத்திரம்தான் வெளிநாடுகளில் தோல்விகளை எதிர்கொள்கின்றதா என்பதை ஏனைய முன்னணி அணிகளினது ஒருநாள் போட்டிகளின் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அந்த வகையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் அந்த அணி, 1971ஆம் ஆண்டே ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கத் தொடங்கியது.
மொத்தம் 830 போட்டிகளில் பங்கேற்று 509 போட்டிகளில் வெற்றிகளையும் 282 போட்டிகளில் தோல்விகளையும் பெற்றுள்ளது. இந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 398 போட்டிகளில் 251 வெற்றிகளையும், வெளிநாடுகளில் நடைபெற்ற 432 போட்டிகளில் 258 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த அணியைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாகவும் சரி, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தோல்விகளை விட வெற்றிகளைத்தான் அதிகம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வரிசையில் அந்த அணியைப் போலவே சகல விதத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஏனைய அணிகளாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் உள்ளன. இந்த அணிகளும் சொந்த மண்ணிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தாம் பங்கேற்ற போட்டிகளின் அடிப்படையில் தோல்விகளைவிட வெற்றிகளையே அதிகம் பதிவுசெய்துள்ளன. (இவற்றுக்கான புள்ளி விவரங்களை அட்டவணைகளில் பார்க்கலாம்)
இதேவேளை, இந்த அணிகளின் வரிசையில் இடம்பிடிக்காத அணிகளுள் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள இந்திய அணியின் புள்ளி விவரத்தைப் பார்க்கையில், அந்த அணி, மொத்தம் 852 போட்டிகளில் பங்கேற்று 424 போட்டிகளில் வெற்றியையும் 384 போட்டிகளில் தோல்விகளையும் பெற்றுள்ளது. இந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 294 போட்டிகளில் 169 வெற்றிகளையும், வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 558இல் பங்கேற்று 255 வெற்றிகளையும் 270 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது.
இந்த அணியின் புள்ளி விவரப்படி, ஒட்டுமொத்தப் பெறுபேறுகளடிப்படையில் தோல்விகளை விட வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேபோலவே சொந்த மண்ணிலும் தோல்விகளை விட வெற்றிகளே அதிகம் பெற்றுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் விளையாடிய போட்டிகளைப் பொறுத்தவரையில் வெற்றிகளைவிட தோல்விகள்தான் அதிகம் காணப்படுகிறது. இது அந்த அணி வெளிநாடுகளில் சொதப்புகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்த வரிசையில் தற்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை அணி, மொத்தம் 712 போட்டிகளில் பங்கேற்று 336 வெற்றிகளையும், 341 தோல்விகளையும் பெற்றுள்ளது. சொந்த மண்ணில் 211 போட்டிகளில் பங்கேற்று 129 வெற்றிகளையும் 62 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ள அதேவேளை, வெளிநாடுகளில் 501 போட்டிகளில் பங்கேற்று 207 வெற்றிகளையும் 279 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது. இலங்கை அணியும் இந்திய அணியைப் போலவே உள்நாட்டில் அதிகமான வெற்றிகளையும் வெளிநாடுகளில் அதிகமான தோல்விகளையே எதிர்கொண்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்த அடிப்படையில் பார்த்தாலும் இலங்கை அணி, வெற்றிகளைக் காட்டிலும் தோல்விகளையே அதிகம் பெற்றுள்ளது.
இந்த அணிகளின் வரிசையில் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துவதும், வெளிநாடுகளில் சொதப்புகின்றஅணிகளாக இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளும் இணைந்துள்ளன.
மேற்குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் வெளிநாட்டு மண்ணில் அதிகமாகத் தோற்பது இந்திய அணி மாத்திரமில்லை. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, இலங்கை, நியூஸிலாந்து அணிகளும்தான் இத்தகைய மோசமான நிலையில் உள்ளன என்பது தெளிவாகின்றது.
எனவே, இந்தியா மாத்திரம்தான் வெளிநாடு களில் சொதப்புகிறது என்ற கருத்தை ஏற்கமுடியாத ஒன்றாகும்..
............
அவுஸ்திரேலியா (1971-2014)
மொத்தம் d 830
வெற்றி d 509
தோல்வி d 282
சமன் d 09
மு.அ. d 30
அவுஸ்திரேலியாவில் 1971-2014)
மொத்தம் d 398
வெற்றி d 251
தோல்வி d 32
சமன் d 03
மு.அ. d 12
வெளியில் (1972d2013)
மொத்தம் d 432
வெற்றி d 258
தோல்வி d 150
சமன் d 06
மு.அ. d 18
...........
இந்தியா (1974-2014)
மொத்தம் d 852
வெற்றி d 424
தோல்வி d 384
சமன் d 07
மு.அ. d 37
இந்தியாவில் (1981-2013)
மொத்தம் d 294
வெற்றி d 169
தோல்வி d 114
சமன் d 02
மு.அ. d 09
வெளியில் (1974-2014)
மொத்தம் d 558
வெற்றி d 255
தோல்வி d 270
சமன் d 05
மு.அ. d 28
........
இலங்கை (1975-2014)
மொத்தம் d 712
வெற்றி d 336
தோல்வி d 341
சமன் d 04
மு.அ. d 31
இலங்கையில் (1982-2013)
மொத்தம் d 211
வெற்றி d 129
தோல்வி d 62
சமன் d 00
மு.அ. d 20
வெளியில் (1975-2014)
மொத்தம் d 501
வெற்றி d 207
தோல்வி d 279
சமன் d 04
மு.அ. d 11
............
தெ.ஆபிரிக்கா (1991-2014
மொத்தம் d 504
வெற்றி d 310
தோல்வி d 174
சமன் d 06
மு.அ. d 14
தெ.ஆபிரிக்காவில் (1992-2013)
மொத்தம் d 212
வெற்றி d 145
தோல்வி d 57
சமன் d 03
மு.அ. d 07
வெளியில் (1991-2013)
மொத்தம் d 292
வெற்றி d 165
தோல்வி d 17
சமன் d 03
மு.அ. d 07
.........
இங்கிலாந்து (1971-2014)
மொத்தம் d 615
வெற்றி d 298
தோல்வி d 289
சமன் d 07
மு.அ. d 21
இங்கிலாந்தில் (1972-2014)
மொத்தம் d 246
வெற்றி d 134
தோல்வி d 97
சமன் d 03
மு.அ. d 12
வெளியில் (1971d2014)
மொத்தம் d 369
வெற்றி d 164
தோல்வி d 192
சமன் d 04
மு.அ. d 09
..........
பாகிஸ்தான் (1973-2014)
மொத்தம் d 816
வெற்றி d 437
தோல்வி d 354
சமன் d 08
மு.அ. d 17
பாகிஸ்தானில் (1976-2014)
மொத்தம் d 176
வெற்றி d 108
தோல்வி d 64
சமன் d 01
மு.அ. d 03
வெளியில் (1973-2014)
மொத்தம் d 640
வெற்றி d 329
தோல்வி d 290
சமன் d 07
மு.அ. d 14
..............
நியூஸிலாந்து (1973d2014)
மொத்தம் d 656
வெற்றி d 282
தோல்வி d 333
சமன் d 06
மு.அ. d 35
நியூஸிலாந்தில் (1973-2014)
மொத்தம் d 250
வெற்றி d 134
தோல்வி d 100
சமன் d 04
மு.அ. d 12
வெளியில் (1973-2013)
மொத்தம் d 406
வெற்றி d 148
தோல்வி d 233
சமன் d 02
மு.அ. d 23
.........
மே.இ.தீவுகள் (1973-2014)
மொத்தம் d 712
வெற்றி d 365
தோல்வி d 315
சமன் d 08
மு.அ. d 24
மே.இ.தீவுகளில் (1977-2014)
மொத்தம் d 218
வெற்றி d 120
தோல்வி d 87
சமன் d 04
மு.அ. d 07
வெளியில் (1973-2014)
மொத்தம் d 494
வெற்றி d 245
தோல்வி d 228
சமன் d 04
மு.அ. d 17
No comments:
Post a Comment