எஸ்.ஜெயானந்தன்
நல்லதொரு தருணம்!இலங்கை அணியின் தற்போதைய முன்னணித் துடுப்பாட்ட வீரர்களுள் முக்கியமான முதல் இரு இடங்களில் உள்ளவர்கள் என்றால், ஒருவர் குமார் சங்கக்கார மற்றையவர் மஹேல ஜெயவர்தன.
இவர்கள் இருவரும் இலங்கை அணியை வழி நடத்திய காலகட்டத்தில், அணியை சிறப்பான பெறுபேறுகளைப் பெற வழிவகுத்தவர்கள்.
எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே சவால் விடுத்தவண்ணமே இருக்கக்கூடியவர்கள் இவர்கள், தற்போது கூட இவர்களின் ஆட்டத்தைக் காண்பதற்காகவே இலங்கை அணி விளையாடும் போட்டிகளைத் தவறவிடாதவர்கள் பலர் உளர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இவர்களது ஆட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. அத்தொடரில் எந்தவொரு தோல்வியையும் அடையாது ஆசியக் கிண்ணத்தைத் தன் வசப்படுத்திக்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணியினர், தமக்கான சம்பளப் பிரச்சினை குறித்து கிரிக்கெட் சபையுடன் வாதம் செய்தனர்.
இலங்கைக்கிரிக்கெட் சபையுடன் முரண்டு பிடித்த வீரர்கள், ஐ.சி.சி.யினால் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்படுகின்ற தொகையில் 12 வீதத்தினை தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் உடனடியாகத் தீர்க்கக்கூடியதாக அமையவில்லை. இதனால், தற்போது பங்களாதே´ல் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக முழுமையான இலங்கை அணியை அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
எனினும், வீரர்கள் அனைவரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தமது சம்பளப் பிரச்சினையை ஒருபுறம் ஒதுங்க வைத்துவிட்டு, பங்களாதேஷ் சென்றுவிட்டனர். வீரர்கள் நாடு திரும்பியதும் சம்பளப்பிரச்சினை குறித்து சிறந்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்கும் முரண்பாடு நிலவுவது இது முதற் தடவையல்ல. ஏற்கனவே இத்தகைய நிலைமை இருந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலைமை இவ்வாறிருக்க,
பங்களாதே´ல் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண இருபதுd20 தொடரின் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை ரசிகர்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இரு வீரர்களின் இருபதுd20 ஆட்டத்துக்கான முற்றுப்புள்ளி விவகாரம் அமைந்துள்ளது.
இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் தற்போது நடைபெற்றுவரும் இருபதுd20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் தாம் இருபதுd20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கிரிக்கெட் சபைக்கும் d வீரர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவியுள்ள நிலையில் குறித்த வீரர்களின் ஓய்வு முடிவு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எதற்காக அவசர அவசரமாக இருவரும் இத்தகைய முடிவை எடுக்கவேண்டும் என பலரும் ஆராய ஆரம்பித்துள்ளனர். இருவரின் ஓய்வை இவ்வாறாக சர்ச்சைக்கு உள்ளாக்ககூடிய சம்பவம் ஒன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளமையும் இதற்குக் காரணமாக அமைகின்றது.
அதாவது, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை, இலங்கை அணி மேற்கொள்ளவிருந்த டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட வருமாறு கிரிக்கெட் சபை வற்புறுத்தியது.
எனினும், தாம் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான தேகாரோக்கியத்துடன் இல்லை என்பதை அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்ட மாலிங்க, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருந்தார். இந்த செயல் அந்தக் காலகட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்பட்டது.
அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதியன்று லோட்ஸ் மைதானத்தில் விரிவுரை ஒன்றை ஆற்றிய குமார் சங்கக்கார, இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளமையால் வீரர்கள் சுயமாக இயங்கக்கூடிய தன்மைகள் அருகிவருகின்றது என் துணிவுடன் உண்மையைப் பேசியமையால், அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.
இத்தகைய சம்பவவங்களே தற்போது குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரது ஓய்வுகுறித்த முடிவையும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் அமையக் காரணமாக அமைந்துள்ளன.
இவர்களது முடிவு குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தெரிவுக்குழு உறுப்பினரும் இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய, சங்கக்கார, மஹேல ஆகியோருடன் நான் வெளிப்படையான தொடர்பு வைத்திருந்தேன். அவர்கள் எதற்காக திடீரென இத்தகைய முடிவை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் இந்த முடிவு குறித்து எம்முடன் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை என்றார்.
குறித்த வீரர்கள் உண்மையிலேயே வயதடிப்படையில் ஓய்வை அறிவிக்கக்கூடிய நிலையிலேயே உள்ளனர். அதேவேளை, இந்த உலகக் கிண்ணத் தொடரும் அவர்களின் ஓய்வுக்கான சிறந்த தருணமாகவே அமைகின்றது. இது வீரர்கள் தமது d அணி சார்ந்த நலன்களைக் கருத்திற்கொண்டு எடுத்திருக்கக்கூடிய முடிவாகவும் இருக்க முடியும்.
எனினும். கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுவதையும் மறுக்க இயலாது.
இவர்கள் இருவரும் திடீரென ஓரே சமயத்தில் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளமையால் இலங்கை அணியால், இவர்களின் இடத்தை நிரப்புவது சுலபமானதாக அமையாது. சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக மாத்திரமின்றி அணிக்குத் தலைமை தாங்கிய காலங்களில் அணியை சிறப்பாக வழி நடத்தியவர்களாகவும் இந்த இருவரும் விளங்குகின்றனர்.
அதேவேளை, அணிக்காகக் கடுமையாக உழைக்கக்கூடியவர்களாகவும் நன்னடத்தையுடையவர்களாகவும் ரசிகர்களால் நோக்கப்படுபவர்கள்.
இவர்களது ஓய்வு முடிவுக்கு இது சிறந்த தருணமோ அல்லது சர்ச்சைக்குரிய முடிவோ என்பதை ஆராய்வதை விடுத்து, அவர்கள் இருபதுd20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது நிச்சயமாக்கப்பட்டுள்ளமையால் இதுவரை குறித்த இரு வீரர்களதும் இருபதுd20 போட்டிகளின் சிறப்புப் பதிவுகளைப் பார்ப்போம்.
முதலில் குமார் சங்கக்கார குறித்துப் பார்த்தால்,
1977ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி மாத்தளையில் பிறந்த இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். இன்றுவரை அந்த வகைப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திவரும் இவர், இருபதுd20 போட்டிகள் சர்வதேச அளவில் அறிமுகமானது முதல் தற்போதுவரை இத்தகைய போட்டிகளிலும் விளையாடியே வருகிறார்.
இருபதுd20 போட்டிகளைப் பொறுத்தவரையில் இவரது முதலாவது போட்டியாக 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி செளத்தம்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம் அமைகின்றது.
உலகக் கிண்ண இருபதுd20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் வரையான பெறுபேறுகளின்படி, 50 போட்டிகளில் விளையாடியிருந்த குமார் சங்கக்கார, மொத்தம் 1311 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இதன் மூலம் அதிக ஓட்டங்களைச் சேர்த்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இதுவரை 7 அரைச்சதங்களை அடித்துள்ள இவர், ஓர் இன்னிங்ஸில் பெற்ற சிறந்த பெறுபேறாக 78 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் இவர் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர்களுள் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றார். முதலிடத்தில் (முதல் மூன்று சிறந்த இடங்கள்) நியூஸிலாந்து வீரரான மக்கலம் உள்ளார்.
அதேவேளை, விக்கெட் காப்பாளராகப் பணியாற்றி துடுப்பாட்ட வீரர்களை அதிக தடவை ஆட்டமிழக்கச் செய்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 42 தடவைகள் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் (54) உள்ளார்.
அத்துடன், அதிக தடவைகள் பிடியயடுப்பு மூலம் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர்கள் வரிசையில் (23) நான்காவது இடத்தில் உள்ள இவர், ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழப்புச் செய்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் (19) உள்ளார்.
சங்கக்காரவின் பெறுபேறுகள் இவ்வாறிருக்க, அடுத்ததாக மஹேல ஜெயவர்தனவின் சிறந்த பெறுபேறுகள் குறித்துப் பார்க்கையில்,
1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 8 வருடங்களின் பின்னர், சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இருபதுd20 போட்டிகளில் முதல் முறையாக, சங்கக்கார அறிமுகமான அதே ஆட்டத்தில் (2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி செளத்தம்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம்) களமிறங்கினார்.
தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண இருபதுd20 தொடர் தொடங்குவதற்கு முன்னரான பெறுபேறுகளின் அடிப்படையில், மஹேல ஜெயவர்தன மொத்தம், 46 போட்டிகளில் பங்கேற்று 1335 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அந்த வகையில் இருபதுd20 போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களைச் சேர்த்த வீரர்களுள் இரண்டாவது இடம் இவருக்கே உரியது.
இவரது சிறந்த இன்னிங்ஸ் பெறுபேறாக 100 ஓட்டங்களைப் பெற்றமையே விளங்குகிறது. ஓர் இன்னிங்ஸில் சிறந்த பெறுபேறுடையவர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்திலும், கூடுதல் அரைச்சதம் (9) அடித்தவர்களில் அடித்தவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
அதேவேளை, ஆட்டநாயகன் விருதினை ஒன்பது தடவைகள் பெற்றுள்ள மஹேல, கூடுதலான ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.
19 இருபதுd20 போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்தவர் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மஹேலவின் தனிப்பட்ட பெறுபேறுகள் இவ்வாறிருக்க, அவர் சங்கக்காரவுடன் இணைந்து ஆடிய ஆட்டங்களின் சிறந்த பெறுபேறுகள் குறித்துப் பார்க்கையில்,
இரண்டாவது விக்கெட்டுக்காக ஓர் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டத்தை (166 ஓட்டங்கள்) வெளிக்காட்டியவர்கள் வரிசையில் இந்த ஜோடிதான் முதலிடத்தில் உள்ளது.
ஏதாவது ஒரு விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக கூடுதலான ஓட்டங்கள் (166) பெற்றோரில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் ஸ்மித்dபொஸ்மன் (தெ.ஆ) உள்ளனர்.
ஒட்டுமொத்த ஆட்டங்களிலும் இணைப்பாட்டமாக அதிக ஓட்டங்களைக் (792) குவித்தவர்கள் வரிசையில் இந்த ஜோடி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் வோர்ணர்d வோட்சன் (1136) ஜோடி உள்ளது.
இவ்வாறு தனிப்பட்ட ரீதியிலும் ஜோடிபோட்டும் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்காட்டிய சங்கக்கார d மஹேல ஜோடி, "இருபதுd20' ஓய்விலும் இணைந்து கொண்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்வதற்குச் சற்றுச் சிரமமான விடயம்தான்.
எனினும், வீரர்கள் ஓய்வுபெறுவதற்கு அவர்களுக்கான சிறந்த தருணம் கிடைக்கும்போது அவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டால்தான் அவர்களது திறமைகளும் காலம் முழுவதும் வரலாற்றில் சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் இந்தத் தருணத்தை விட்டால் சங்கக்கார d மஹேல இருவரும் தமது ஓய்வை அறிவிப்பதற்கான சிறந்த தருணம் கிடைப்பது இனிவரும் காலங்களி அரிதாகவே உள்ளமையால், அவர்களின் ஓய்வு குறித்த முடிவை வரவேற்று வெற்றியுடன் விடைபெற வாழ்த்தி அனுப்புவோமாக...
......
முழுப்பெயர் d மஹேல டி சில்வா ஜெயவர்தன
பிறந்தது d 27 மே 1977, கொழும்பு
ரிd20 அறிமுகம் d 15 ஜூன் 2006 செளத்தம்டன்
எதிரணி d இங்கிலாந்து
விளையாட்டு வகை d துடுப்பாட்டம்
விளையாடும் அணிகள் d இலங்கை, ஆசிய லெவன், டில்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், கோச்சி டஸ்கர்ஸ் கேரளா, சிங்கள விளையாட்டுக் கழகம், டிரினிடாட் அன்ட் டுபாகோ, வயம்ப
இருபதுd20 பெறுபேறுகள்
போட்டிகள் 49 (2006d2013)
ஓட்டங்கள் 1335 (உலக அளவில் 2ஆவது இடம்)
சிக்ஸர்கள் 30
பெளண்டரி 153 (உ.அ. 3ஆவது இடம்)
50கள் 9 (உ.அ. ஐந்தாவது இடம்)
100கள் 1
சிறந்த இன்னிங்ஸ் 100 (உ.அ. 9ஆவது இடம்)
அணித்தலைவராக 19 போட்டிகள்
...............
முழுப்பெயர் d குமார் சொக்ஸானாட சங்கக்கார
பிறந்தது d 27 ஒக்டோபர் 1977, மாத்தளை
ரிd20 அறிமுகம் d 15 ஜூன் 2006 செளத்தம்டன்
எதிரணி d இங்கிலாந்து
விளையாட்டு வகை d துடுப்பாட்டம், விக்கெட் காப்பாளர்
விளையாடும் அணிகள் d இலங்கை, ஆசிய லெவன், மத்திய மாகாணம், கொழும்பு மாவட்டம், டெக்கான் சார்ஜர்ஸ், ஐ.சி.சி. உலக லெவன், ஜமைக்கா தல்லவாக்ஸ், கந்துரட்ட, கந்துரட்ட மரூன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், மரில்போன் கிரிக்கெட் கழகம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வார்விக்சயர்
இருபதுd20 பெறுபேறுகள்
போட்டிகள் 50 (2006d2014)
ஓட்டங்கள் 1311 (உலக அளவில் 4ஆவது இடம்)
சிக்ஸர்கள் 19
பெளண்டரிகள் 131 (உ.அ. 5ஆவது இடம்)
50கள் 7 (உ.அ. 6ஆவது இடம்)
100கள் 00
சிறந்த இன்னிங்ஸ் 78
அணித்தலைவராக 22 போட்டிகள்
.............
மஹேல-சங்கக்கார இணைப்பாட்டத்தில்
ஏதாவது ஒரு விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக கூடுதலான ஓட்டங்கள் (166 பெற்றோரில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் ஸ்மித்d பொஸ்மன் (தெ.ஆ) உள்ளனர்.
இரண்டாவது விக்கெட்டுக்காக ஓர் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்ட வரிசையில் (166) முதலிடத்தில் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இணைப்பாட்டமாக அதிக ஓட்டம் பெற்றோரில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். (792), முதலிடத்தில் வோர்ணர்d வோட்சன் (1136) ஜோடி உள்ளது.
No comments:
Post a Comment