எஸ்.ஜெயானந்தன்
அதிரடித் தொடர்இன்று ஆரம்பம்
விளையாட்டு என்றால்.... அது போட்டிகள் நிறைந்ததே. இல்லையேல் அது விளையாட்டு இல்லை. அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் அந்தந்தப் போட்டிகளில் மிகவும் உயர்வாக எதாவது ஒரு போட்டித் தொடர் காணப்படும். அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப்பெரிய தொடர் என்றால் அது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்தான்.
ஆரம்ப காலத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளே கிரிக்கெட் போட்டிகளாக நடத்தப்பட்டன. பின்னர் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு அதில் உலகக் கிண்ணத்துக்கான போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நவீன கால d வேகமான உலகத்தில் கிரிக்கெட்டின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு இருபதுd20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச ரீதியில் அறிமுகமானது.
பின்னர் இந்தப் போட்டிகளுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளையும் நடத்துவதென முடிவெடுத்த சர்வதேசக் கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.), 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதலாது இருபதுd20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் இத்தொடரின் முதாலது கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணி அத்தொடரின்போது, அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தது. மற்றொரு அரையிறுதியாட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இந்திய அணியிடம் இறுதியாட்டத்தில் தோற்றது.
பின்னர், இரண்டாவது இருபதுd20 உலகக் கிண்ணத் தொடர் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது.
இத்தொடரின் அரையிறுதியாட்டங்களில், தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் அணியும், மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
இறுதியாட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது.
மூன்றாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 2010ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது.
இத்தொடரின் அரையிறுதியாட்டங்களில், இலங்கை அணியை அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானை இங்கிலாந்தும் வீழ்த்தின.
பின்னர் இறுதியாட்டத்தில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.
2012ஆம் ஆண்டு நான்காவது உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றது.
இத்தொடரின் முதலாவது அரையிறுதியாட்டத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானை வீழ்த்த, இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அவுஸ்திரேலியாவை இலகுவாகச் சாய்த்தது.
பின்னர் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சொந்த மண்ணில் வைத்து கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது.
கடந்த நான்கு உலகக் கிண்ணத் தொடர்களின் பெறுபேறுகள் அவ்வாறிருக்க இரண்டு ஆண்டுகள் புரண்டோடிய நிலையில் ஐந்தாவது உலகக்கிண்ண இருபதுd20 தொடர் இன்றையதினம் பங்களாதே´ல் ஆரம்பிக்கிறது.
இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளான இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்றுள்ளமையால் நேரடியாகவே இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.
அதேவேளை, இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான தகுதிகாண் சுற்றில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், கொங்கொங், சிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த அணிகள் தலா நான்கு அணிகளாக பிரிவு d ஏ, பிரிவு dபி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன (அட்டவணையைப் பார்க்க).
இந்த அணிகள் ஒவ்வொன்றும் தமது பிரிவிலுள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர் இரு பிரிவுகளிலும் முதலிடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான சுப்பர்d10 இற்குத் தகுதிபெறும்.
இந்த அணிகளுக்கான ஆட்டத்தின் முதலாவது ஆட்டம் இன்றையதினம் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் பங்களாதேஷ் அணியுடன் கடந்த ஆசியக் கிண்ணத் தொடரின்போது பங்களாதேஷிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பர்d10 சுற்றில் பங்கேற்கும் அணிகள் பிரிவுd1, பிரிவுd2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தலா நான்கு அணிகள் இரு பிரிவுகளிலும் இடம்பிடித்துள்ளமையால், தகுதிகாண் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடித்த அணி, பிரிவுd1இலும், தகுதி காண் சுற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்த அணி பிரிவுd2இலும் சேர்க்கப்படும் (அட்டவணையைப் பார்க்க).
பின்னர் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் இரு பிரிவுகளிலும் இடம்பிடித்துள்ள அணிகள், தத்தமது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். ஒவ்வொரு அணிக்கும் தலா 4 போட்டிகள் வீதம் நடைபெறும்.
சுப்பர்d10 சுற்றானது எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும். இந்த ஆட்டத்தில் இந்தியாdபாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்திலும் சூடு பறக்கும் நிலையே காணப்படுகிறது.
இரண்டாவது சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர். இந்தச் சுற்றின் அடிப்படையில் இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியாட்டங்களுக்குத் தெரிவாகும்.
முதலாவது அரையிறுதியாட்டம் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெறும். இந்த ஆட்டத்தில் பிரிவு d1இல் முதலிடம் பிடித்த அணியும், பிரிவுd2இல் இரண்டாவது இடம் பிடித்த அணியும் மோதும்.
இரண்டாவது அரையிறுதியாட்டம் ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெறும். இந்த ஆட்டத்தில் பிரிவுd2இல் முதலிடம் பிடித்த அணியும், பிரிவுd1இல் இரண்டாவது இடம் பிடித்த அணியும் மோதும்.
பின்னர் இறுதியாட்டம் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறும். இந்த ஆட்டத்தில் இரு அரையிறுதியாட்டங்களிலும் வெற்றிபெற்ற அணிகள் மோதும். இந்தப் போட்டியே ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும்.
போட்டி நடைபெறும் தினமாக ஏப்ரல் 6ஆம் திகதி தவிர்க்கமுடியாத காரணங்களால் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டால், மறுதினம் போட்டிகளை நடத்துவதற்காக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடைபெறும் முறைமைகள் இவ்வாறிருக்க, இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் குறித்துப் பார்க்கையில்,
நடப்பு சம்பியனாகக் களமிறங்கும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் முன்னாள் சம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவுd2இல் இடம்பிடித்துள்ளன. இவற்றுடன் அவுஸ்திரேலிய அணியும் இடம்பிடித்துள்ளது.
மொத்தத்தில் இந்தப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டிகள் ஒவ்வொன்றிலும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
அதேபோல பிரிவுd1ஐப் பார்த்தால், அந்தப் பிரிவில் முன்னாள் சம்பியனான இங்கிலாந்து அணி, தற்போது இருபதுd20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கை அணி, தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த அணிகளும் ஒன்றையயான்று சவாலுடன் எதிர்த்தாடும் நிலை உள்ளபோதும், பிரிவுd2இல் இடம்பிடித்துள்ள அணிகளுக்கிடையிலான மோதலளவுக்குப் பரபரப்பு இருக்காது என்பது தெட்டத்தெளிவு.
கடந்த கால இருபதுd20 உலகக் கிண்ணத் தொடர்களின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகள் குறித்துப் பார்த்தால்,
இதுவரை உலகக் கிண்ணத்தை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.
இறுதிப் போட்டிக்கு இரு தடவைகள் முன்னேறியிருந்த இலங்கை அணியால் ஒரு தடவையேனும் கிண்ணத்தை நுகரமுடியவில்லை.
ஒட்டுமொத்த இருபதுd20 உலகக் கிண்ணத் தொடர்களிலும் ஓர் இன்னிங்ஸிற்காக அதிக ஓட்டங்களைச் சேர்த்த அணியாக இலங்கை விளங்குகிறது. அந்த அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ஓட்டங்களை கென்யாவுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு பெற்றிருந்தது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியா (218/4), தென்னாபிரிக்கா (211/5) அணிகள் உள்ளன.
அதேவேளை, ஓர் இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டப் பெறுபேற்றைப் பெற்ற வீரர்கள் வரிசையில், நியூஸிலாந்தின் மைக்கலம் (123 ஓட்டங்கள் d 58 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117d57), இந்தியாவின் ரெய்னா (101d60), இலங்கையின் மஹேல ஜெயவர்தன (100d64) ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஓர் இன்னிங்ஸில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற வீரராக இலங்கை அணியின் அஜந்த மெண்டிஸ் (6 விக்கெட்டுகள் d 8 ஓட்டங்கள் d 4 ஓவர்கள்) உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தானின் உமர்குல் (5d6d3) மற்றும் இலங்கையின் மலிங்க (5d31d4) ஆகியோர் உள்ளனர்.
அதேவேளை, இருபதுd20 உலகக் கிண்ணத் தொடர்களில் வீரர் ஒருவர் ஒட்டுமொத்தமாக சேர்த்த ஓட்டங்கள் அடிப்படையில், இலங்கை அணியின் மஹேல ஜெயவர்தன முதலிடத்தில் உள்ளார். இவர் 25 போட்டிகளில் விளையாடி 858 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இரண்டாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ்கெய்லும் (664 ஓட்டங்கள் d 18 போட்டிகள்), அடுத்தடுத்த இடங்களில் இலங்கை வீரர்களான டில்ஷான் (632 ஓட்டங்கள் d 25 போட்டிகள்), சங்கக்கார (590 ஓட்டங்கள் d 25 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இதுவரை அதிக விக்கெட்டுகளைச் சாய்த்தவராக இலங்கையின் மலிங்க (33 விக்கெட்டுகள்d25 போட்டிகள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் அஜ்மல் (32/19) உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் இலங்கையின் மெண்டிஸ் (31/18), பாகிஸ்தானின் அப்ரிடி (31/26) ஆகியோர் உள்ளனர்.
அதேவேளை, ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ரசிகர்களைக் கு´ப்படுத்தும் சிக்ஸர்களை அதிகம் அடித்தவர்கள் குறித்துப் பார்க்கையில், இதுவரை அதிக சிக்ஸர்களை அடித்தவராக மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் 43 சிக்ஸர்களை அடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் அவுஸ்திரேலியாவின் வோட்சன் (27), இந்தியாவின் யுவராஜ்சிங் (27), இலங்கையின் மஹேல (22) ஆகியோர் உள்ளனர்.
ஒட்டுமொத்த இருபதுd20 உலகக் கிண்ணத் தொடரின் பெறுபேறுகளின் அடிப்படையில் அணியினதோ அல்லது வீரர்களினதோ சிறந்த பெறுபேறுகளைப் பார்க்கையில், இலங்கையின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்லாதது மாத்திரமே பின்னடைவாக உள்ளது.
எந்தவொரு சிறப்பான பெறுபேற்றை எடுத்துக்கொண்டாலும் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் இலங்கை வீரர்கள் எவராவது ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவை இவ்வாறிருக்க, இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பங்களதே´ல் ஆரம்பமாகும் ஐந்தாவது இருபதுd20 தொடரில் சம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளாக ஆசியாவைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளே எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆசிய காலநிலைக்கேற்ப விளையாடிப் பழக்கப்பட்டுப்போன இந்த அணிகளுக்கு பங்களாதேஷ் ஆடுகளங்களின் தன்மைகளும் நன்கு பரீட்சயமாகவுள்ளமையும் இதற்கு ஒரு உதாரணம்.
அதேவேளை, இந்தத் தொடரில் சுழல்பந்து பெரிதும் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சுழல் பந்துவீச்சைப் பயன்படுத்தவே அணிகள் முயலும் நிலை உள்ளது.
எது எப்படியோ இந்த இருபதுd20 தொடர் கடும் சவால் மிகுந்ததாகவே காணப்படும்.
இதேவேளை, ஆண்களுக்கான இருபதுd20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பெண்களுக்கான இருபதுd20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய பெண்கள் அணியை எதிர்த்து நியூஸிலாந்து பெண்கள் அணி மோதுகிறது.
இந்தத் தொடருக்கான இறுதியாட்டமும் ஆண்களுக்கான இறுதியாட்டம் நடைபெறும் அதே தினமே நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
..............
இருபதுd20
உலகக் கிண்ணம்
தலைமை d ஐ.சி.சி.
ஆட்டத்தின் வகை d 20 ஓவர்கள்
முதல் தொடர் d 2007 (மே.இ.தீவுகள்)
கடைசித் தொடர் d 2012 (இலங்கை)
அடுத்தது d 2014 (பங்களாதேஷ்)
அணிகள் d சர்வதேச ரீதியிலானவை
நடப்பு சம்பியன் d மே.இ.தீவுகள்
அதிக பட்டம் d நான்கு அணிகள் தலா ஒருமுறை
(இந்தியா, பாகிஸ்தான்,
இங்கிலாந்து, மே.இ.தீவுகள்)
சிறந்த இன்னிங்ஸ்d இலங்கை (260/6)
அதிக ஓட்டம் d மஹேல 858 (இலங்கை)
அதிக விக்கெட் d மலிங்க 33 (இலங்கை)
.............
தகுதிகாண் போட்டி
பிரிவு ஏ
பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான்
நேபாளம்
கொங்கொங்
பிரிவு பி
சிம்பாப்வே
அயர்லாந்து
ஐ.அ.இராச்சியம்
நெதர்லாந்து
...........
"சுப்பர்' 10 சுற்று
பிரிவு 1
இலங்கை
இங்கிலாந்து
தென்னாபிரிக்கா
நியூஸிலாந்து
தகுதி அணி பி1
பிரிவு 2
மே.இ.தீவுகள்
இந்தியா
பாகிஸ்தான்
அவுஸ்திரேலியா
தகுதி அணி ஏ1
.......
இருபது-20 உலகக் கிண்ணம்-2014
போட்டி அட்டவணை
01. பங்களாதேஷ்dஆப்கானிஸ்தான் 16 மார்ச் பி.ப. 3.30
02. கொங்கொங்dநேபாளம் 16 மார்ச் இரவு 7.30
03. அயர்லாந்துdசிம்பாப்வே 17 மார்ச் பி.ப. 3.30
04. நெதர்லாந்துdஐ.அ.இராச்சியம் 17 மார்ச் இரவு 7.30
05. ஆப்கானிஸ்தான்dகொங்கொங் 18 மார்ச் பி.ப. 3.30
06. பங்களாதேஷ்dநேபாளம் 18 மார்ச் இரவு 7.30
07. நெதர்லாந்துdசிம்பாப்வே 19 மார்ச் பி.ப. 3.30
08. அயர்லாந்துdஐ.அ.இராச்சியம் 19 மார்ச் இரவு 7.30
09. ஆப்கானிஸ்தான்dநேபாளம் 20 மார்ச் பி.ப. 3.30
10. பங்களாதேஷ்dகொங்கொங் 20 மார்ச் இரவு 7.30
11. சிம்பாப்வேdஐ.அ.இராச்சியம் 21 மார்ச் மு.ப. 11.30
12. அயர்லாந்துdநெதர்லாந்து 21 மார்ச் பி.ப. 3.30
13. இந்தியாdபாகிஸ்தான் 21 மார்ச் இரவு 7.30
14. தெ.ஆபிரிக்காdஇலங்கை 22 மார்ச் பி.ப. 3.30
15. இங்கிலாந்துdநியூஸிலாந்து 22 மார்ச் இரவு 7.30
16. அவுஸ்திரேலியாdபாகிஸ்தான் 23 மார்ச் பி.ப. 3.30
17. இந்தியாdமே.இ.தீவுகள் 23 மார்ச் இரவு 7.30
18. நியூஸிலாந்துdதெ.ஆபிரிக்கா 24 மார்ச் பி.ப. 3.30
19. இலங்கை dதகுதி அணி(பி1) 24 மார்ச் இரவு 7.30
20. மே.இ.தீவுகள்dதகுதிஅணி(ஏ1) 25 மார்ச் இரவு 7.30
21. தெ.ஆபிரிக்காdதகுதிஅணி(பி1) 27 மார்ச் பி.ப. 3.30
22. இங்கிலாந்துdஇலங்கை 27 மார்ச் இரவு 7.30
23. அவுஸ்திரேலியாdமே.இ.தீவுகள் 28 மார்ச் பி.ப. 3.30
24. இந்தியாdதகுதி அணி(ஏ1) 28 மார்ச் இரவு 7.30
25. நியூஸிலாந்துdதகுதிஅணி(பி1) 29 மார்ச் பி.ப. 3.30
26. இங்கிலாந்துdதெ.ஆபிரிக்கா 29 மார்ச் இரவு 7.30
27. பாகிஸ்தான்dதகுதிஅணி(ஏ1) 30 மார்ச் பி.ப. 3.30
28. அவுஸ்திரேலியாdஇந்தியா 30 மார்ச் இரவு 7.30
29. இங்கிலாந்துdதகுதிஅணி(பி1) 31 மார்ச் பி.ப. 3.30
30. நியூஸிலாந்துdஇலங்கை 31 மார்ச் இரவு 7.30
31. அவுஸ்திரேலியாdதகுதிஅணி(ஏ1) 01 ஏப்ரல் பி.ப. 3.30
32. பாகிஸ்தான்dமே.இ.தீவுகள் 01 ஏப்ரல் இரவு 7.30
அரையிறுதி1 03 ஏப்ரல் இரவு 7.00
பிரிவு1இல் முதலிடம் d பிரிவு2இல் 2ஆம் இடம்
அரையிறுதி2 04 ஏப்ரல் இரவு 7.00
பிரிவு2இல் முதலிடம் d பிரிவு1இல் 2ஆம் இடம்
இறுதியாட்டம் 06 ஏப்ரல் இரவு 7.00 (மேலதிக நாள் 07 ஏப்ரல்)
இரு அரையிறுதியாட்டங்களிலும் வென்ற அணிகள்
No comments:
Post a Comment