விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து திறமையான நிலையில் இருந்தால்தான் அவர்களால் நீண்ட காலம் விளையாட்டில்
நீடித்திருக்கமுடியும் என்பது எழுதப்படாத நியதி.
அந்த வகையில் உலகக் கிரிக்கெட்டில் 24 வருடங்களாக விளையாடியவர் என்ற பெருமையை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் தலைவரான டோனி, தனது 10 ஆண்டு காலப் பயணத்தை பல்வேறு
சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிட்டகாங்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், தனது 23ஆவது வயதில் இந்திய அணியில் அறிமுகமானார் டோனி.
தற்போது, கடந்த 23ஆம் திகதியுடன் 10 ஆண்டுகள் முடிந்து 11ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதுவரை 89 டெஸ்ட்கள், 250 ஒருநாள் போட்டிகள், 50 ‘இருபது-20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரையில் வெற்றிபெறும்போது ரசிகர்கள் வீரர்களை உச்சத்தில் வைத்துக்கொண்டாடுவார்கள். அதேவேளை, தோல்வியைச் சந்தித்தால் நடு வீதியில் போட்டு உருவப்படங்களை எரிப்பதும் வீரர்களின் வீடுகள் மீது தாக்குவதும் என படுமோசமாக கீழிறக்கி வைத்துவிடுவார்கள்.
இத்தகைய வெற்றி-தோல்விப் பாதிப்புகளுக்கு மத்தியிலும், தேர்வாளர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்துள்ள டோனி, தனது 10 வருடங்களைப் பூர்த்தி செய்தமையைப் பெருமையாகத்தான் கொள்ளவேண்டும்.
ஏனெனில், எத்தனையோ வீரர்கள் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது என்ற நிலையில் இருந்துள்ளனர்.
இந்திய அணிக்காகப் பல்வேறு வெற்றிகளைத் தேடிக்கொடுத்த எத்தனையோ வீரர்கள், இளம் வீரர்களின் வருகையையடுத்து அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுவருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய உத்தேச அணியிலும் அதை நாம் காணக்கூடியதாகவே உள்ளது.
அத்துடன், புதிது புதிதாக உருவாகிவரும் இளமையான - திறமையான வீரர்களுக்கே எதிர்காலக் கிரிக்கெட் பயணத்தைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அளிக்கும் நிலையும் உள்ளது.
எனவே, இத்தகைய பல்வேறுபட்ட நெருக்கடியான கட்டங்களைக் கடந்து 10 ஆண்டுகள் வரை அணியில் நிலைத்து நிற்பது என்பதும் சாதனைக்குரிய விடயம்தான்.
டோனியின் வெற்றிப்பயணம் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமின்றி, இந்தியாவின் பிரபல்யமிக்க ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அவரது தலைமையில் பங்கேற்று வரும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ளது. அத்துடன், சம்பியன் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் இருபது-20 தொடரிலும் இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ளமையும் பெருமைக்குரிய விடயமே.
இந்தியர்களைப் பொறுத்த வரையில் டோனி ‘கூல் கப்டன்’ என்பதே இறுதி முடிவு.
........
முக்கிய குறிப்புகள்
2007ஆம் ஆண்டு இந்திய ‘இருபது-20’ அணிக்கு தலைவரான டோனி, முதல் தொடரிலேயே, உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
1983ஆம் ஆண்டு கபில்தேவ் சாதித்ததை, 28 ஆண்டுக்குப் பின் 2011ஆம் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தையும், 2013ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தையும் (மினி உலகக் கிண்ணம்) வென்று சாதித்தார் டோனி.
டெஸ்ட் (27 வெற்றிகள்), ஒருநாள் (93) மற்றும் ‘இருபது-20’ (26) என மூன்று கிரிக்கெட் அணிக்கும் தலைவராக இருந்து அதிக வெற்றிகளைத் தேடிக்கொடுத்த முதல் அணித்தலைவரும் இவர்தான்.
அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு அணித்தலைவராக இருந்த கங்குலியை (49) முந்திய டோனி (59), உலகளவில் ‘இருபது-20’ போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற முதல் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அயர்லாந்தின் போர்டர்பீல்டு (20 வெற்றிகள்) அடுத்த இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் 7ஆவது இடத்தில் களமிறங்கி, சதம் அடித்த ஒரே அணித்தலைவரான டோனி, மூன்று வகைப் போட்டிகளிலும் விக்கெட் காப்பாளராக இருந்து அதிக விக்கெட்டுகளைச் சரித்த (டெஸ்ட்-285, ஒருநாள்-306, ‘இருபது-20’-36) இந்தியர் என்ற சாதனையும் பெற்றுள்ளார்.
இது தவிர, மிக வேகமாக டெஸ்ட் சதம் (93 பந்துகளில்) அடித்த இந்தியர் என்ற பெருமை பெற்ற டோனி, டெஸ்ட் அணித்தலைவராகப் பங்கேற்ற முதல் 11 டெஸ்ட்களில் 8 வெற்றிகள், மூன்றை சமநிலை செய்து சாதித்தார்.
தனது 10 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட்கள் (20 தொடர்களில், 6 தோல்விகள், 3 சமநிலை), 21 ஒருநாள் (37இல் 16 தோல்விகள்), 6 ‘இருபது-20’ (21இல் 11 தோல்விகள், 4 சமநிலை) என, மொத்தம் 38 கிண்ணங்கள் வென்று கொடுத்துள்ளார்.

No comments:
Post a Comment