Thursday, January 1, 2015

விளையாட்டுகள் - 2014

ஜனவரி
5 இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா. 
10 ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது, ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. 
12 சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சுனில் ஷெட்டியும், மகளிர் பிரிவில் அங்கிதா தாஸýம் சாம்பியன் பட்டம் வென்றனர். 
26 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரஃபேல் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்றார் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா. 
26 இந்திய கிராண்ட் ப்ரீ கோல்ட் பாட்மிண்டன் தொடரின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், சக வீராங்கனை சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பிப்ரவரி
9 சோச்சி குளிர்கால ஒலிம்பிக் தொடரில், 15 வயது ரஷ்ய தடகள வீராங்கனை யுலியா லிப்னிட்ஸ்கயா, இள வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதித்தார்.
18 ஹாக்கி உலக லீக் தொடரில் நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
18 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் முச்சதம் அடித்தார்.
23 தில்லி ஓபன் ஏடிபி சேலஞ்சர் டிராபி டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் சாம்பியன் பட்டம் வென்றார்.
மார்ச்
1 கால்பந்து வீரர்கள் தலைப்பாகை அணியவும், வீராங்கனைகள் முகப்பாவை அணியவும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) அனுமதி வழங்கியது.
8 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை.
16 விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ரயில்வே அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கர்நாடக அணி. 
18 தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, ஜீ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ. 100 கோடி கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
25 ஜெர்மனியில் நடைபெறும் பண்டல்ஸ் லிகா கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அணி 24-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
25 ஐபிஎல் சூதாட்ட வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமெனில், பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
27 இந்திய முன்னாள் கேப்டன் காவஸ்கரை, பிசிசிஐ இடைக்காலத் தலைவராக நியமித்தது உச்ச நீதிமன்றம். சீனிவாசனை தலைவர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல்
6 இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
16 கோபா டெல் ரே கால்பந்து தொடரில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட் அணி.
19 அமெரிக்காவில் நடைபெற்ற ரிச்மண்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார்.
27 இங்கிலாந்து கால்பந்து கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை, லிவர்பூல் அணிக்காக ஆடிய உருகுவே வீரர் லூயிஸ் செüரஸ் வென்றார்.
மே
3 போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸô, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 
6 ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவு வெளியான ஒரு மணி நேரத்தில், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை பிசிசிஐ இடை நீக்கம் செய்தது.
11 :ஸ்பெயின் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். 
14 குத்துச்சண்டை இந்தியா அமைப்புக்கு சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு ஒப்புதல் அளித்தது.
24 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி, பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
29 மொனாக்கோ கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த ஜெர்மனி கார் டிரைவர் நிகோலஸ் ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூன்
1 பெங்களூரில் நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ரித்திமான் சாஹா சதம் விளாசி உதவ, பஞ்சாப் அணி 119 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த இலக்கை சேஸ் செய்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி.
7 பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா, ருமேனியாவின் சிமானோ ஹாலேப்பை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் வென்றார்.
8 பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். 
15 உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழத்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
16 துபையில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்ùஸன் பட்டம் வென்றார்.
25 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மனாக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
29 ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
ஜூலை
13 பிரேசிலில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஆர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனியின் மரியோ கோட்ச வெற்றிக்கான கோலை அடித்தார். இதன் மூலம் தென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது.
18 உலகச் சாம்பியனான ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம், சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
27 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.
ஆகஸ்ட்
1 காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், அந்தோணி அமல் ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 காமன்வெல்த்: மகளிருக்கான இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
3 காமன்வெல்த்: பாட்மிண்டன் போட்டியில் ஆந்திர வீரர் காஷ்யப் தங்கம் வென்றார். ஹாக்கியில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தம் 64 பதக்கங்களை (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) வென்றது.
17 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இங்கிலாந்து.
19 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படு தோல்வியடைந்ததால், ஒரு நாள் தொடருக்கான அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர்
5 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி பட்டம் வென்றது. 
7 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 
7 இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது.
13 அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கம். 
13 தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் தங்கம் வென்றார்.
14 ஆசிய விளையாட்டுப் போட்டி, பாட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை தீபிகா பல்லிகல் வெண்கலம் வென்றார்.
28 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் பிரிவில் யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்.
29 ஆசிய விளையாட்டு, மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார்.
29 டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, சாகேத் மைனேனி ஜோடி தங்கம் வென்றது.
30 மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் நடுவரின் தவறான தீர்ப்பினால், இந்திய வீராங்கனை சரிதா தேவி தோல்வியடைந்தார். இதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அக்டோபர்
2 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஹாக்கி பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா நேரடித் தகுதி பெற்றது.
3 ஆசிய விளையாட்டுப் போட்டி: நடுவரின் தவறான தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, பதக்கத்தை ஏற்க மறுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, தன் செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
4 சாம்பியன்ஸ் லீக் டி-20 இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
18 இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளார் பொறுப்பில் இருந்து டெர்ரி வால்ஷ் விலகினார்.
21 இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்ததை அடுத்து, எதிர்காலத்தில் அந்த அணியுடன் நேரடிப் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்தது. 
29 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.
நவம்பர்
1 சுற்றுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம், பிசிசிஐ ரூ. 250 கோடி இழப்பீடு கோரியது.
3 "2007 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன், டிராவிட்டுக்கு பதிலாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு, அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என்னிடம் வற்புறுத்தினார்' என்று, சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்திருந்தார். இது போன்ற பல்வேறு சர்ச்சைத் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன.
13 கொல்கத்தாவில் நடைபெற்ற, இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார். 
14 ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரித்த நீதிபதி முத்கல் குழு அறிக்கையில், ஐசிசி தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளரான ராஜ் குந்த்ரா, கிரிக்கெட் நிர்வாகி சுந்தரராமன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
16 சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நெவாலும், ஆடவர் பிரிவில், ஸ்ரீகாந்தும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
17 ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில், விதிமுறைகளை மீறிய வீரர்கள் மீது சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, நீதிபதி முத்கல் குழு விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
23 ரஷியாவின் சோச்சியில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியஷிப் போட்டியில், உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தார்.
26 தேர்வுக் குழு நிராகரித்த போதிலும், நீதிமன்றத்தின் மூலமாக போராடி அர்ஜுனா விருதை வென்றார் குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார்.
30 மக்காவ் ஓபன் கிராண்ட் ஃப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து பட்டம் வென்றார்.
டிசம்பர்
14: லண்டனில் நடைபெற்ற "லண்டன் செஸ் கிளாசிக்' தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்.
17: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்து, பரிசளிப்பு விழாவில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு, சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு ஓராண்டு தடை விதித்தது.
20: முதல் முறையாக நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.


நன்றி-தினமணி

No comments:

Post a Comment

Total Pageviews

8,866