யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர் பைனலில், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி 17 வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்று அசத்தினார் செரினா.
நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்காவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 58 நிமிட போராட்டத்துக்குப் பின் 7-5 என, செரினா கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4-1 என முன்னிலை பெற்றார். இருப்பினும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய அசரன்கா 6-6 என சமன் செய்ய, மீண்டும் "டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் 7-6 என, அசரன்கா வென்று பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் சொதப்பினார் அசரன்கா. இதை பயன்படுத்திக் கொண்ட செரினா, 6-1 என வென்றார். 2 மணி நேரம், 45 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில், செரினா வில்லியம்ஸ் 7-5, 6-7, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.
இது இவரது ஐந்தாவது யு.எஸ்., ஓபன் பட்டம். தவிர, 17 வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை.

No comments:
Post a Comment