Wednesday, September 11, 2013

மக்கள் மனங்கவர் கள்வனானார் சங்கா


இலங்கை கிரிக்கெட் சபை வருடாந்த கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வின்போது இவ்வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவாகியுள்ளார். அவருக்குப் போட்டியாகக் காணப்பட்ட குமார் சங்கக்காரவை முந்தியே ரங்கன ஹேரத்திற்கு இந்த விருது கிடைக்கப் பெற்றது.
இலங்கையின் உள்ளூர், சர்வதேசப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கான இந்த விருது வழங்கல் விழாவின் போது இலங்கை வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் இவ்வாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ரங்கன ஹேரத்தும், சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக குமார் சங்கக்காரவும், சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத்தும் தெரிவாகினர்.
இவை தவிர, மக்களின் விருதுகளின் மூலம் அதிக பிரபலமான வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குமார் சங்கக்கார வெற்றிகொண்டார்.
முழுமையான விருது விபரங்கள்:
சிறந்த கிரிக்கெட் வீரர்: ரங்கன ஹேரத்
சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்: குமார் சங்கக்கார
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்: ரங்கன ஹேரத்
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி துடுப்பாட்ட வீரர்: திலகரட்ண டில்ஷான்
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிபந்துவீச்சாளர்: லசித் மலிங்க
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
வளர்ந்துவரும் வீரர்: டினேஷ் சந்திமால்
மக்கள் தெரிவு விருது: குமார் சங்கக்கார
சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: ஷஷிகலா சிரிவர்தன
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி துடுப்பாட்ட வீராங்கனை: சாமனி செனவிரத்ன
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி பெண் பந்துவீச்சாளர்: தீபிக ரசங்கிக்கா
சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி சகலதுறை வீராங்கனை: ஷஷிகலா சிரிவர்தன
உள்ளூர் விருதுகள்:
சிறந்த முதற்தரப் போட்டி துடுப்பாட்ட வீரர்: கௌஷால் சில்வா
சிறந்த முதற்தரப் போட்டி பந்துவீச்சாளர்: மலிந்த புஷ்பகுமார
சிறந்த முதற்தரப் போட்டி சகலதுறை வீரர்: டில்ருவான் பெரேரா
சிறந்த ஒருநாள் வீரர்: குசால் பெரேரா
சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர்: அஜந்த மென்டிஸ்
சிறந்த ஒருநாள் சகலதுறை வீரர்: கீத் குமார
23 வயதிற்குட்பட்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஷிஹான் கமிலீன்
23 வயதிற்குட்பட்ட சிறந்த பந்துவீச்சாளர்: துலஞ்சன மென்டிஸ்
23 வயதிற்குட்பட்ட சிறந்த சகலதுறை வீரர்: ஷெஹான் ஜெயசூரிய
சிறந்த நடுவர்கள்:
பிறீமியர் "ஏ" பிரிவு நடுவர்: ரவீந்திர விமலிசிரி
பிறீமியர் "பி" பிரிவு நடுவர்: நிலன் டீ சில்வா
"சரா" பிரிவு நடுவர்: கிறிஸாந்த றொட்ரிக்கோ
ஊடக விருதுகள்:
மிகச்சிறப்பான சாதனைகளுக்கான விருதுகள்:
ஆங்கிலம்: எல்மோ றொட்ரிகோபுல்லே
சிங்களம்: தமிந்த விஜயசூரிய
தமிழ்: நெவில் அந்தனி
ஊடகப் பங்களிப்பான விருது: பாலித்த பெரேரா
சிறந்த விளையாட்டு ஊடகவியலாளர்: சானக டீ சில்வா

..........................
english

SLC Awards 2013 recipients

No comments:

Post a Comment

Total Pageviews

8,866