
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன்.
இவர் கடந்தாண்டு 14 வயதுக்குட்பட்ட போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை முத்திரை பதிக்கும் வகையில் ஆடவில்லை.
இந்நிலையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், எனது மகன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான்.
என்னை போன்று அவனையும் ஒப்பிட்டு பார்க்காதீர்காள், சாதாரண சிறுவனை போன்று பாருங்கள்.
பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மும்பை விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சச்சினுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment