போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 28. தற்போது
ரியல் மாட்ரிட் கிளப் அணி சார்பில் விளையாடி வருகிறார். இவரது ஒப்பந்தம்
2015ல் முடிவடைகிறது.இதனை 2018 ஆண்டு வரை நீடித்துள்ளனர். எவ்வளவு தொகை அதிகமாக கொடுக்கப்பட்டது என்பதை, அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ரொனால்டோ ஆண்டுக்கு ரூ. 142 கோடி வருமானம் பெறுவார் எனத் தெரிகிறது. தவிர, ஐரோப்பிய நாடுகளில் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர் என்ற பெருமை பெறுவார். பார்சிலோனா அணியின் மெஸ்சியை விட ரூ. 8 கோடி
அதிகம் பெறுவார்.
No comments:
Post a Comment