எஸ்.ஜெயானந்தன்
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பகல்- இரவு ஆட்டமாக தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட்கள் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபது-20 போட்டிகள் கொண்ட பெருந்தொடரில் பங்கேற்றுவருகிறது.
இதில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இலங்கை அணி கைப்பற்றியது.
இந்நிலையில், ஆரம்பித்துள்ள ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்றன.
இதனால் 5 போட்டிகளைக் கொண்ட 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் இந்தப் போட்டி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பிக்கும்.
இரு அணிகளும் இதுவரை மொத்தம் 93 போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியுள்ளன. இதில் 57 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் 32 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. 4 போட்டிகள் முடிவற்றவையாக அமைந்துள்ளன.
அதேவேளை, இலங்கையில் நடைபெற்ற போட்டிக்ள அடிப்படையில் பார்த்தால், இலங்கையில் நடைபெற்ற 27 போட்டிகளில் இதில் 14 போட்டிகளில் இலங்கையும் 10 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் வென்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
ஏற்கனவே தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளமையால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் இத்தொடரில் முன்னிலை பெறமுடியும்.
இதனால் இரு அணிகளும் இன்றையதினம் ஒன்றை ஒன்றை வீழ்த்துவதற்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.

No comments:
Post a Comment