Saturday, November 29, 2014

காலனின் விளையாட்டு!


எஸ்.ஜெயானந்தன்

லக விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பரபரப்பான கட்டங்களைக் கடந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தை எந்தளவுக்கு அளிக்கின்றனவோ, அந்தளவுக்கு பரிதாபகரமான சோக நிகழ்வுகளையும் பதியத் தவறுவதில்லை.
அந்தவகையில் ஆசியர்களான எமக்கு மிகவும் பரீட்சயமான விளையாட்டான கிரிக்கெட்டில் சோக நிகழ்வொன்று நடந்துள்ளது.

பிலிப் ஹியுஸ் தொடர்பான படங்கள்

Monday, November 24, 2014

இங்கிலாந்து - இலங்கை மோதல் ஒரு பார்வை


இப்போது திருப்தியா?

சிறந்த திட்டமிடல்கள், பயிற்சிகள் இன்றி அணியை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பியதால் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது? மாறாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் மேலும் மேலும் குழப்ப நிலை ஏற்படும் சந்தர்ப்பமே உருவாகியுள்ளது
லங்கைக் கிரிக்கெட் சபையின் உயரதிகாரிகளுக்கிடையில் நிகழும் பனிப்போர், வீரர்கள் - அதிகாரிகளுக்கிடையில் நிகழும் மறைமுக மோதல்

Monday, November 17, 2014

வழி மாறிய வீரர்

1964ஆம் அண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் கிளவுசெசரில்
பிறந்தவர்தான் டேவிட் வலென்ரைன் லாவ்ரென்ஸ்.
இவர் தனது 24ஆவது வயதில், 25 ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு லோட்ஸில் ஆரம்பித்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளராகக் களமிறங்கினார்.
பின்னர் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதியன்று வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு

பெண்கள் கிரிக்கெட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ‘பாலியல் லஞ்சம்’

ண்மைய சில வாரங்களாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள்  பரபரப்பை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள விடயம், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதாயின் தேர்வாளர்களுக்கு வீராங்கனைகள் ‘பாலியல் ரீதியிலான லஞ்சம்’ கொடுக்கவேண்டும் என்பதாகும்.

Thursday, November 13, 2014

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு குடித்த சச்சின்! (சுயசரிதை பாகம்-2)

ச்சின் டெண்டுல்கர் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' அறிமுகத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் முதல் முறை கேப்டன் ஆனது முதல் நாட்வெஸ்ட் தொடர் வெற்றி வரை அடக்கம்:

மேற்கு மண்டலம், மும்பை அணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்தபடியால், சச்சினுக்குக் கேப்டன் பொறுப்பு என்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்திய அணியின் தலைமைப்பொறுப்பு வித்தியாசமானது. கேப்டனின் ஒவ்வொரு நகர்வும் தலைப்புச்செய்தி ஆனது ஒருபுறம் என்றால், ஐந்து மண்டலங்களில் இருந்தும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தபடியால், தான் விரும்பிய அணி கிடைக்காமல் சச்சின் திண்டாடிய தருணங்கள் சில உண்டு.

Tuesday, November 11, 2014

சைக்கிள் கேட்டு கதவில் தலையைவிட்ட சச்சின்! (சுயசரிதை பாகம்-1)

ச்சினின் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' நூலைப்பற்றிய அறிமுகத்தின் முதல் பகுதி இது. முதல் பாகத்தில் 1996 உலகக்கோப்பை வரையிலும், அடுத்ததில் 2003 உலகக்கோப்பை வரையிலும், மூன்றாவது பாகத்தில் டெஸ்டில் நம்பர் ஒன் இடம் பெற்ற கதை வரையும், மிச்சம் இறுதி பாகத்திலும் இடம்பெறும்.

இந்த நூலை தன்னுடைய சக இந்தியர்களுக்கு சச்சின் சமர்ப்பணம் செய்திருக்கிறார். நூலின் மொழிநடை மிகவும் எளிமையாகவே இருக்கிறது. யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவோடு நூலை கட்டமைத்து இருக்கிறார். நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்த அவரின் கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கணத்தில் "பாஜி, நீங்கள் இறுதியாக ஒரு முறை பிட்சுக்கு போகவேண்டும் என்பதை நினைவுபடுத்த சொன்னீர்கள் என்று கோலி சொல்வதோடு நூல் துவங்குகிறது. 

Monday, November 10, 2014

மிரட்டிய பாகிஸ்தானும் மிரண்டுபோன ஆஸியும்

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தரம், 20 ஆண்டுகளின் பின்னர் உயர்வடைந்துள்ளதால் அந்த அணி குறித்த பேச்சே கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த மாதம் பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மூன்று வகையான போட்டிகள் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் இந்த மாதம் 3ஆம் திகதிவரை நடைபெற்றன.

Monday, November 3, 2014

தேசிய விளையாட்டு : மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்


இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக் கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Sunday, November 2, 2014

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் ஆட்டம்!



இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று பகல்-இரவு ஆட்டமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.


இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் சபை, இலங்கை அணியுடன் விளையாடுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.

Total Pageviews