Monday, February 2, 2015

கோட்டைவிட்ட இந்தியா!

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


 5 

எட்டாவது உலகக் கிண்ணத் தொடர் 2003ஆம் ஆண்டு பெப்ரவரி 09 முதல் மார்ச் 24 வரை தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

12 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டாகப் (‘ஏ’, ‘பி’) பிரிக்கப்பட்டு நடைபெற்றதுடன், இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் ‘சுப்பர்-6’ சுற்றுக்குத் தகுதிபெற்று, அதிலிருந்து முதல் நான்கு அணிகள் அரையிறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது (அட்டவணைகள் தரப்பட்டுள்ளன). 
அதன்படி அரையிறுதியாட்டங்களில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி (212/7), இலங்கை அணியை (123/7,38.1) டக்வோர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தெரிவானது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் இந்தியா (270/4), கென்யாவை (179) துவம்சம் செய்து இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது.
பின்னர் கங்குலி தலைமையிலான இந்திய அணி, பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலியாவுடன் இறுதியாட்டத்தில் மோதியது. இந்த இறுதியாட்டத்தில், அவுஸ்திரேலிய அணி, பொண்டிங்கின் சதத்தின் (140) உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 359 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் வெற்றியிலக்கைத் துரத்த முனைந்த இந்திய அணியை, அவுஸ்திரேலியர்கள் ஆக்ரோஷத்துடன் கட்டுப்படுத்தினர். இதனால் இந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ஓட்டங்களுடன் சுருண்டது. அந்த அணி சார்பாக ஷேவாக் மாத்திரமே (82) 
சிறப்பாக ஆடியிருந்தார்.
 இறுதியாட்டத்தின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் பொண்டிங்கும், தொடரின் நாயகனாக இந்தியாவின் சச்சினும் தெரிவாகினர்.
இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி, மூன்று தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணி என்ற பெருமையைப் பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு தடவைகள் சம்பியனான அணி என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் பகிர்ந்துகொண்டது.
இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக அவுஸ்திரேலியா வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் அஸ்திரேலிய அணி எந்தவொரு தோல்வியையும் சந்திக்காதமையைக் குறிப்பிடலாம்.

‘ஏ’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2003)
அணி      போ வெ தோ மு.அ. புள்ளி
ஆஸி.       6 6 0        - 24
இந்தியா 6 5 1         - 20
சிம்பாப்வே 6 3 2       1 14
இங்கிலாந்து 6 3 3        - 12
பாகிஸ்தான் 6 2 3       1 10
நெதர்லாந்து 6 1 5        - 04
நமிபியா 6 0 6        - 00

‘பி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2003)
அணி போ வெ தோ மு.அ. புள்ளி
இலங்கை 6 4 1 - 1 18
கென்யா 6 4 2 - - 16
நியூஸிலாந்து 6 4 2 0 - 16
தெ.ஆ. 6 3 2 - 1 14
மே.இ.தீ. 6 3 2 1 - 14
கனடா 6 1 5 - - 04
பங்களாதேஷ் 6 0 5 1 - 02

‘சுப்பர்-6’ சுற்றில் அணிகளின் நிலைவரம் 2003
அணி           போ வெ  தோ புள்ளி மே.பு.
ஆஸி.               3 3 0      24 12
இந்தியா       3 3 0     20 08
கென்யா               3 1 2     14 10
இலங்கை       3 1 2     11.5 7.5
நியூஸிலாந்து 3 1 2     08 4

சிம்பாப்வே       3 0 3    3.5 3.5


‘ஹெட்ரிக்’ சம்பியனான ஆஸி.!

ஒன்பதாவது உலகக் கிண்ணத் தொடர் 2007ஆம் ஆண்டு மார்ச் 03 முதல்
ஏப்ரல் 28 வரை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது.
16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நான்காகப் (‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’) பிரிக்கப்பட்டு நடைபெற்றதுடன், நான்கு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் ்சுப்பர்-8ி சுற்றுக்குத் தகுதிபெற்று, அதிலிருந்து முதல் நான்கு அணிகள் அரையிறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது (அட்டவணைகள் தரப்பட்டுள்ளன). 
அதன்படி முதலாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை (289/5), நியூஸிலாந்து அணியை (208) 81 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தெரிவானது. 
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி (153/3), தென்னாபிரிக்க அணியை (149) வீழ்த்தி இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது.
மஹேல தலைமையிலான இலங்கை அணி, பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலியாவை இறுதியாட்டத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டம் காலநிலை சீரின்மையால் 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருந்தது.
இந்த இறுதியாட்டத்தில், அவுஸ்திரேலிய அணி, கில்கிறிஸ்டின் சதத்தின் (149) உதவியுடன் 4 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 281 ஓட்டங்களைக் சேர்த்தது.
மீண்டும் இந்தப் போட்டியின் ஓவர்கள் 36 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 269 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் வெற்றியிலக்கைத் துரத்திய இலங்கை அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களையே சேர்க்கமுடிந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி, நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணி என்ற பெருமையைப் பெற்றதுடன், தொடர்ந்து மூன்று தடவைகள் சம்பியனான அணி என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டது.
இறுதியாட்டத்தின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டும் தொடரின் நாயகனாக சக வீரரான மெக்ராத்தும் தெரிவாகினர்.
எட்டாவது உலகக் கிண்ணத் தொடரைப்போலவே இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி எந்தவொரு தோல்வியையும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏ’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2007)
அணி போ வெ தோ புள்ளி
ஆஸி. 3 3 0 06
தெ.ஆ. 3 2 1 04
நெதர்லாந்து 3 1 2 02
ஸ்கொட்லாந்து 3 0 3 00

‘பி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2007)
அணி போ வெ தோ புள்ளி
இலங்கை 3 3 0 06
பங்களாதேஷ் 3 2 1 04
இந்தியா 3 1 2 02
பெர்முடா 3 0 3 00

‘சி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2007)
அணி போ வெ தோ புள்ளி
நியூஸிலாந்து 3 3 0 06
இங்கிலாந்து 3 2 1 04
கென்யா 3 1 2 02
கனடா 3 0 3 00

‘டி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2007)
அணி போ வெ தோ சமன் புள்ளி
மே.இ.தீ. 3 3 0 - 06
அயர்லாந்து 3 1 1 1 03
பாகிஸ்தான் 3 1 2 - 02
சிம்பாப்வே 3 0 2 1 01


‘சுப்பர்-8’ சுற்றில் அணிகளின் நிலைவரம் 2007
அணி போ வெ தோ புள்ளி ஓ.ச.
ஆஸி. 6 6 0 12 2.4
இலங்கை 6 4 2 08 1.483
நியூஸிலாந்து 6 4 2 08 0.253
தெ.ஆ. 6 4 2 08 0.313
இங்கிலாந்து 6 3 3 06 -0394
மே.இ.தீவுகள் 6 1 5 02 -0.566
பங்களாதேஷ் 6 1 5 02 -1.514

அயர்லாந்து 6 1 5 02 -1.71


ஆசிய ஆதிக்கம் நிறைந்த தொடர்

பத்தாவது உலகக் கிண்ணத் தொடர் 2007ஆம் ஆண்டு பெப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் நடைபெற்றது.
14 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டாகப் (‘ஏ’, ‘பி’) பிரிக்கப்பட்டு நடைபெற்றதுடன், இரண்டு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்று, அதிலிருந்து முதல் நான்கு அணிகள் அரையிறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது (அட்டவணைகள் தரப்பட்டுள்ளன). 
முதல் சுற்று ஆட்டங்களின் அடிப்படையில்  காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கிடையிலான ஆட்டங்களில், மேற்கிந்தியத் தீவுகளை (112) பாகிஸ்தானும் (113/0), அவுஸ்திரேலியாவை (260/6) இந்தியாவும் (261/5), தென்னாபிரிக்காவை (172) நியூஸிலாந்தும் (221/8), இங்கிலாந்தை (229/6) இலங்கையும் (231/0) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
அதன்படி முதலாவது அரையிறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி (260/9), பாகிஸ்தான் அணியை (231) 29 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தெரிவானது. 
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் இலங்கை அணி (220/5), நியூஸிலாந்து அணியை (217) வீழ்த்தி இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது.
சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி, டோனி தலைமையிலான அவுஸ்திரேலியாவை இறுதியாட்டத்தில் எதிர்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மஹேல ஜெயவர்தனவின் சதத்தின் (103) உதவியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை எட்டியது.
சவால் மிக்க வெற்றியிலக்கைத் துரத்த ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரரான ஷேவாக் ஓட்டம் எதையும் சேர்க்காமல் மலிங்கவின் வேகத்தில் சிக்கினார்.
எனினும் பின்னர் வந்த வீரர்களுள் கம்பீர் (97) மற்றும் டோனி (91*) ஆகியோரின் நிதான-அதிரடி ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 277 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றியிலக்கைக் கடந்தது.
இதன் மூலம் இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி, உலக அரங்கில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது.
இறுதியாட்டத்தின் நாயகனாக இந்தியாவின் டோனியும், தொடரின் நாயகனாக சக வீரரான யுவராஜ் சிங்கும் தெரிவாகினர்.
இந்தியாவில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்துடன் இரு சாதனை நட்சத்திரங்கள் ஓய்வுபெற்றிருந்தன. அதாவது இந்தியாவின் சச்சின் மற்றும் இலங்கையின் முரளிதரன் ஆகியோரே அந்த நட்சத்திரங்களாகும். சச்சின் வெற்றிக்களிப்புடன் ஓய்வை எட்ட பெருத்த ஏமாற்றத்துடன் முரளிதரன் ஓய்வு பெறவேண்டியதாயிற்று.
அதேவேளை, உலகக் கிண்ண வரலாற்றில் இரு ஆசிய அணிகள் இறுதியாட்டத்தில் பங்கேற்றமை 
சிறப்பம்சமாகும். அத்துடன், மற்றொரு ஆசிய அணியான பாகிஸ்தான் அரையிறுதிவரை முன்னேறியிருந்தது. பங்களாதேஷ் அணி கூட காலிறுதிக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பை சராசரி புள்ளிக ளடிப்படையில் தான் இழந்தது.
அந்த வகையில் இத்தொடர் முழுவதும் ஆசிய அணிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தமை ஆசியக் கண்டத்துக்கே சிறப்பை ஏற்படுத்தியிருந்தது. 

‘ஏ’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2011)
அணி போ வெ தோ மு.அ. புள்ளி
பாகிஸ்தான் 6 5 1 - 10
இலங்கை 6 4 1 1 09
ஆஸி. 6 4 1 1 09
நியூஸிலாந்து 6 4 2 - 08
சிம்பாப்வே 6 2 4 - 04
கனடா 6 1 5 - 02
கென்யா 6 0 6 - 00

‘பி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலை (2011)
அணி போ வெ தோ புள்ளி
தெ.ஆ. 6 5 1 - 10
இந்தியா 6 4 1 1 09
இங்கிலாந்து 6 3 2 1 07
மே.இ.தீ. 6 3 3 - 06
பங்களாதேஷ் 6 3 3 - 06
அயர்லாந்து 6 2 4 - 04
நெதர்லாந்து 6 0 6 - 00

 (தொடரும்)

No comments:

Post a Comment

Total Pageviews

8,866