Sunday, February 22, 2015

இந்திய-தென்னாபிரிக்க மோதல்!

11ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இன்றையதினம் நடைபெறும் ஆட்டங்களின், முதலாவது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிபில் இடம்பிடித்துள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் நியூஸிலாந்தின் டுனெடின் மைதானத்தில் இலங்கை நேரப்படி அதிகாலை காலை 3.30 மணியளவில் களம் காண்கின்றன.

ஏற்கனவே, தாம் எதிர்கொண்ட போட்டிகளில் இரு அணிகளும் தோற்ற நிலையில் இன்றையதினம் மோதுகின்றன.
அதேபோல, இலங்கை நேரப்படி இன்று காலை 9 மணிக்கு  மெல்பேர்ணில் ஆரம்பமாகும் மற்றொரு போட்டியில்  பி பிரிவிலுள்ள இந்திய - தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை மொத்தம் 70 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. அதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரையில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து 3 போட்டிகளில் மோதியுள்ளன. அனைத்திலும் தென்னாபிரிக்க அணியே வெற்றிபெற்றுள்ளது.
அதேவேளை, நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணி பாகிஸ்தானையும், தென்னாபிரிக்க அணி சிம்பாப்வேயையும் வென்றன.
இவ்வாறானதொரு நிலையில் இரு அணிகளும் இன்றையதினம் களம் காண்கின்றன.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866