
என்ன இது? நம்பவே முடியவில்லையே! என நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இதை நீங்கள் நம்பியே ஆகவேண்டும்.
அந்த வகையில் கடந்தகால உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாட்டு வீரர்களாக இருந்து, தற்போதைய - நடப்புத் தொடரில் பயிற்றுவிப்பாளர்களாகக் களமிறங்கியுள்ளவர்கள் குறித்துப் பார்ப்போம்.
மாவன் அத்தப்பத்து
(இலங்கைப் பயிற்றுவிப்பாளர்)
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மாவன் அத்தப்பந்து தற்போதைய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவர் 1999 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்று 15 போட்டிகளில் ஆடியுள்ளதுடன் 521 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். இவரது உலகக் கிண்ண ஆட்டங்களின் அடிப்படையிலான சராசரி 43.42 ஆகும். ஏற்கனவே இவர் கனடா மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கும் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெரன் லெக்மன்
(அவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர்)
அவுஸ்திரேலிய அணி இரு தடவைகள் உலக சம்பியனாகிய தருணங்களில் அந்த அணியில் இடம்பிடத்திருந்த டெரன் லெக்மன், தற்போது அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவர் 1999 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தை வென்றபோதே உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றிருந்தார். இவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தம் 19 போட்டிகளில் பங்கேற்று 360 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இவரது சராசரி 32.73 ஆகும்.
சண்டிக ஹத்துரசிங்க, ஹேத் ஸ்ரெக்ட், ருவான்
கல்பகே (பங்களாதேஷ்)
பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணியிலும் முன்னாள் உலகக் கிண்ண வீரர்கள் சிலர் இணைந்துள்ளனர். பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ள ஹத்துரசிங்க, இலங்கை அணிக்காக 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சகல துறை வீரராக இவர் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிம்பாப்வே அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஹெத் ஸ்ரெக்ட் தற்போதைய பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். இவர் 1996, 1999, 2002ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்று, 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் 328 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். அத்துடன், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 8 போட்டிகளுக்கு அணித்தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
மேற்குறித்த இருவருடன் மூன்றாவதாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் வரிசையில் இணைபவர், இலங்கை அணியின் முன்னாள் வீரரான ருவான் கலபவே ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது பங்களாதேஷ் அணியின் களத்தடுப்புப் பயிற்சியாராகவுள்ளார்.
டங்கன் பிளெட்சர்
(இந்திய பயிற்றுவிப்பாளர்)
சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரும் சகல துறை வீரரருமான டங்கள் பிளெட்சனர், தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவர் சிம்பாப்வே அணி முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்குக் தகுதி பெற்று அணியில் இடம்பிடித்தார். 1983ஆம் நடைபெற்ற அந்தத் தொடரில், அவுஸ்திரேலிய அணியை, சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெறக்காரணமாக இருந்தவர். இவர் அந்த ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் 69 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
பில்ப்ஸ் சைமன்ஸ்
(அயர்லாந்து பயிற்றுவிப்பாளர்)
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரரான பில்ப்ஸ் சைமன்ஸ், தற்போதைய அயர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவர்1987 1992, 1999ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்திருந்தார். 336 ஓட்டங்களைச் சேர்த்துள்ள இவர் 8 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். மொத்தம் 13 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஷேன் பொண்ட்
(நியூஸிலாந்து பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர்)
நியூஸிலாந்தின் முன்னாள் வேகப்பந்துவீச்சாராளன ஷேன்பொண்ட், தற்போதைய நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவர் 2003, 2007ஆம் ஆண்டுகளில் நியூஸிலாந்து அணிக்காக உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும் சாய்த்தமை சிறப்பம்சமாகும்.
வக்கார் யூனுஸ், கிராண்ட் பிளவர், முஸ்ராக் அஹமட்
(பகிஸ்தான் பயிற்றுவிப்பாளர் குழு)
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ள வக்கார் யூனுஸ், பாகிஸ்தான் அணி சார்பாக 1996, 1999. 2003ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களின் 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 22 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிராண்ட்ஸ் பிளவர், 1996, 1999. 2003ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களின் 21 போட்டிகளில் சிம்பாப்வே அணிக்காகப் பங்கேற்று மொத்தம் 512 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சுழல்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகவுள்ள முஸ்ராக் அஹமட், 1992 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பாகிஸ்தான் அணி சார்பாகப் பங்கேற்றிருந்தார். 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான இவர், அப்போட்டியில் 41 ஓட்டங்களை விட்டுக்கெடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.
பௌல் கொலிங்வூட்
(ஸ்கொட்லாந்து துணைப் பயிற்றுவிப்பாளர்)
இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான பௌல் கொலிங்வூட், ஸ்கொட்லாந்து அணியின் துணைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார். இவர் 2003, 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளார். மொத்தம் 474 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
அலன் டொனால்ட்
(தென்னாபிரிக்க பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர்)
தென்னாரிக்க அணியின் பந்துவீச்சாளராக 1992, 1996, 1999 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் 25 போட்டிகளில் பங்கேற்றதுடன், 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இவர் தற்போது தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.
ஆகிப் ஜாவட்
(ஐக்கிய அரபு இராச்சியம் பயிற்றுவிப்பாளர்)
1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அந்த அணியில் விளையாடியிருந்திருந்த ஆகிப் ஜாவட், 1996ஆம் ஆண்டும் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடினார். உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளைப் பிடுங்கியுள்ளார். இவர் தற்போது ஐச்சிய அரபு இராச்சிய அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
ரிச்சி ரிச்சட்சன்
(மேற்கிந்தியத் தீவுகள் பயிற்றுவிப்பாளர்)
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான ரிச்சி ரிச்சட்சன், 1987, 1992 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றதுடன், 639 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். இவர் தற்போது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment