Thursday, October 10, 2013

ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தில்ஷான் ஓய்வு

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் தில்ஷானின் மனைவியும் கலந்து கொண்டார். 
1999ம் ஆண்டு நவம்பர் மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற ரெஸ்ட் தொடரில் திலகரட்ண தில்ஷான் தனது ரெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். 

இறுதியாக 2013 மார்ச் கொழும்பில் பங்களாதேஸ் அணியுடனான ரெஸ்ட் போட்டியில் பங்குபற்றினார். 

இதுவரை அவர் 87 ரெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,492 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 16 சதங்களும் 23 அரைச்சதங்களும் அடங்குகின்றன. அவர் பெற்ற அதிகூடிய ரெஸ்ட் ஓட்டங்கள் 193 ஆகும். 

மேலும் ரெஸ்ட் போட்டிகளில் 3,385 பந்துகளை வீசியுள்ள தில்ஷான், 39 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 

No comments:

Post a Comment

Total Pageviews