Thursday, October 10, 2013

ஓய்வு நாளை எதிர்நோக்கி சச்சின்

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகஇருப்பதாகவும், இந்த நாளை எதிர் நோக்கி இருப்பதாகவும், இது வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பி,சி.சி.ஐ.,க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

1989 முதல் இந்தியாவிற்கென ஆடி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் இது வரை டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 837 ரன்கள் எடுத்துள்ளார். 51 சதம் 67 அரை சதங்களும் , எடுத்துள்ளார். ஏற்கனவே சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என எதிர்பார்த்து பேசப்பட்டு வந்த நேரத்தில் இவர் இந்த கடிததத்தை அனுப்பியுள்ளார்.

11 வயது முதல் கிரிக்கெட் :

இந்த கடிதத்தில் சச்சின் கூறியிருப்பதாவது: ஓய்வு பெறுவதற்கான நேரம் என்பதை நான் இதயப்பூர்வமாக உணர்கிறேன் . இதனை அறிவிப்பதற்கு எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இது வரை எனக்கு துணையாகவும், பலமாகவும் இருந்த பி.சி.சி.ஐ., மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் அளித்த ஆதரவே எனக்கு பலமாக இருந்து வந்தது. கடந்த காலத்தில் கனவுகளுடன் இந்திய அணிக்காக உழைத்தேன். 24 ஆண்டுகள் ஆடியது எனக்கு கவுரவமாக கருதுகிறேன். 11 வயது முதல் கிரிக்கெட் ஆடி வந்துள்ளேன். கிரிக்கெட் இல்லாத வாழ்வை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தற்போது, சொந்த மண்ணில் எனது 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளதை எதிர்பார்த்துள்ளேன். அன்று முதல் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்,'' இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டிகள் கோல்கட்டா (ஈடன் கார்டன்), மும்பையில் (வான்கடே) நடக்கவுள்ளன. இதில் எந்த இடத்தில் 200வது டெஸ்ட் என இன்னும் முடிவாகவில்லை. என்றாலும், அட்டவணைப்படி, 2 வது டெஸ்ட் போட்டி வரும் நவ., 14 முதல் 18 வரை நடக்கவுள்ளது. 

மதிப்பளிக்கிறோம்:

இவரது ஓய்வு குறித்து பி.சி.சி.ஐ.,தலைவர் சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில் சச்சின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதே நேரத்தில் அவர் இல்லாத கிரிக்கெட்டை நினைத்து பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866