
ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, 36.
டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கூறியது:
எனது வீட்டில் "ஜிஞ்சர்' எனும் நாய்க்குட்டி வளர்த்து வருகிறேன். ஆறு மாதம் மட்டுமே ஆகும் இந்த குட்டி, வீட்டின் அனைத்து இடங்களிலும் துள்ளிக் குதித்து கொண்டிருக்கும்.

இரண்டாவது வீடு:
நான் ஒவ்வொரு முறையும், இந்தியா வரும் போது மிகவும் பெருமைப் படுவேன். ஏனெனில், வாழ்க்கையில் எப்படி நடப்பது, எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என, இந்தியா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. இது எனது இரண்டாவது தாய் வீடு போன்றது.
இதேபோல, எதிர்வரும் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்த மாதம் ஆஷஸ் தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடர், மிகவும் கைகொடுக்கும்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.
No comments:
Post a Comment