Monday, October 7, 2013

'உலா' படத்தில் ஆட்டம் போடும் கிரிக்கெட் வீரர் பிராவோஸ

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வைன் பிராவோ தமிழ் சினிமா படம் ஒன்றில் நடனமாடுகிறார்.  சென்னையில் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

நான் வெஸ்ட் இண்டீஸில் உள்ள டிரினிடாடைச் சேர்ந்தவன். இந்தியாவைப்போல் எங்கள் ஊரும் கலாச்சாரத்திற்கு முக்கியத் துவம் கொடுக்கிற இடமாகும். குறிப்பாக தமிழ் பண்பாடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
நடனம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், தமிழ் சினிமா ஒன்றில் என்னை நடனமாட அழைத்திருக்கிறார்கள். தமிழ்க் கலாச்சாரம்,பண்பாடு எனக்கு பிடித்துப் போய்விட்டதால் நடனம் ஆட உடனே ஒப்புக் கொண்டேன்.
நான் நடனம் ஆடும் படத்தின் பெயர் உலா. படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தொடங்குகிறது.
இந்திய நடிகர்களில் எனக்கு ஷாருக்கான் மிகவும் பிடிக்கும். நடிகைகள் யாரையும் எனக்குத் தெரியாது. தமிழ்ப்படங்களை இதுவரை பார்த்ததில்லை இனிமேல் பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார் டிவைன் பிராவோ.


No comments:

Post a Comment

Total Pageviews

8,866