உலக விளையாட்டுகளுள் நம் நாட்டில் மிகவும் பிரசித்தம் பெற்று விளங்கும் கிரிக்கெட்டும் ஒன்று. இத்தகைய கிரிக்கெட்டை உருவாக்கிய தாயகமாக இங்கிலாந்து விளங்குகிறது. கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகள் உள்ளன. அவை டெஸ்ட், 50 ஓவர்கள் மற்றும் இருபது- 20 போட்டிகளாகும்.
இவற்றுள் மிகவூம் பாரம்பரியம்மிக்கதும் தொன்மையானதுமான போட்டியாக டெஸ்ட் விளங்குகிறது. ஆரம்ப காலத்தில் இந்தப் போட்டிகள் மாத்திரமே நடத்தப்பட்டன. பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் வேகத்தை அதிகரிக்கும் முகமாகவூம் மைதானத்துக்கு அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திழுக்கு முகமாகவூம் 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்டுவரப்பட்டு இதில் உலகக் கிண்ணப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பின்னHஇ தற்கால - வேகமான உலகில் கிரிக்கெட்டிலும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் மூலமே ரசிகர்களைக் கூடுதலாகக் கவர முடியும் என்ற நிலைப்பாட்டுடன் இருபது-20 போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு புதிது புதிதாக கிரிக்கெட்டின் வகைகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றபோதும், ஒரு வீரரின் உண்மையான திறமையைப் பறைசாற்றக்கூடியதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளே விளங்குகின்றன.
இத்தகைய கிரிக்கெட்டை உருவாக்கிய நாடாக இங்கிலாந்து விளங்குகின்றபோதும், அங்கு குறிப்பிடக்கூடிய ஜாம்பவான்களாக கிரிக்கெட்டில் எவரும் உருவாகவில்லை என்றே கூறவேண்டும். மாறாக அவூஸ்திரேலியா,மேற்கிந்தியத் தீவுகளிலேயே ஆரம்ப காலத்தில் ஜாம்பவான்கள் உருவாகினர்.
அந்த வகையில் அவூஸ்திரேலியர்கள் மாத்திரமின்றி உலக கிரிக்கெட் ஆர்வலர்களாலும் குறிப்பிடப்படுகின்ற அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்கியவர்- விளங்குபவர்தான் சேர் டொனால்ட் பிரட்மன். இவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அதிகளவான போட்டிகள் எவையூம் நடைபெறாதபோதும் ஒப்பீட்டளவில் (சராசரி அடிப்படையில்) ஏனைய வீரHகளை விட இவரது புள்ளி விவரம் எட்ட முடியாதளவூக்கு எகிறியுள்ளது. அந்தளவூக்கு இவரது விளையாட்டுத் திறன் அமைந்துள்ளது. இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 80 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி மொத்தம் 6996 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இவர் ஆடிய ஆட்டங்களில் ஓர் இன்னிங்ஸில் அதிகப்படியாகப் பெற்ற ஓட்டமாக 334 ஓட்டங்கள் காணப்படுகின்றன. இவை இவ்வாறிருக்க இவரது சராசரிதான் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. 99.94 என்பதுதான் இவரது சராசரியாகும். இந்த சராசரி எந்தவொரு வீரராலும் நெருங்க முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த சராசரியே பிரட்மனை உயர்த்தியும் காட்டுகிறது.
பிரட்மனுக்கு அடுத்த காலகட்டத்தில் ஜொலித்த ஜாம்பவான்தான் மேற்கிந்தியத் தீவூகளின் வீரரான ரிச்சர்ட்ஸ். இவரது ஆட்டத்திறனே அந்தக் கால கட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் பல வெற்றிகளைத் தேடிக்கொடுத்தது. இவர் 121 போட்டிகளில் பங்கேற்று 182 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 8540 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார் ஓர் ஆட்டத்தில் இவரது சிறந்த பெறுபேறாக 291 ஓட்டங்கள் பெற்றமையைக் குறிப்பிடலாம். இவரது சராசரி 50.23 ஆகும்.
இந்த இரு ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியான காலத்தில் உருவான சிறந்த வீரர்களாக சம காலத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடியவர்களான இந்திய நட்சத்திரமான சச்சின் மற்றும் மேற்கிந்தியத் தீவூகள் வீரரான பிரையன் லாரா ஆகியோர் விளங்குகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டுள் சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு புகுந்தார். லாரா ஒரு வருடம் கழித்து (1990) களம் புகுந்தார்.
லாராவைப் பொறுத்தவரையில் இவர் தனது அதிரடி மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்தியவர். இவரது அதிரடி ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே மைதானத்துக்குள் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இவர் ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களைச் சேர்த்தமை இவரது உயர்ந்த இடத்தைக் காட்டுவதற்கு சிறந்த உதாரணமாகும். இதுவே வீரர் ஒருவர் ஓர்ஆட்டத்தில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவூம் விளங்குகிறது. 131 ஆட்டங்களில் பங்கேற்று 232 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள இவர், மொத்தம் 11953 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவரது ஓட்ட சராசரி 52.88 ஆகும். இவருக்கு முன்னர் டெஸ்டில் அறிமுகமான சச்சின் இப்போது கூட விளையாடிக் கொண்டிருக்கின்றபோதும்இ லாரா தனது ஓய்வை விரைவாகவே அறிவித்துவிட்டார். இவர் 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன் டெஸ்ட் போட்டிகளை விட்டுச் சென்றார்.
அடுத்ததாக கிரிக்கெட் விளையாடும் தற்கால இளம் வீரர்களின் ரோல் மொடலாக விளங்குபவர்தான் சச்சின் டெண்டுல்கர். இவர் மைதானத்துள் நுழைந்தாலே போதும் ரசிகர்களின் ஆரவாரத்தைத் தாங்க முடியாது. அந்தளவுக்கு இவரது ஆட்டப் பாணி தனித்துவமிக்கதாகவே காணப்படும்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்த திறமையான வீரர் என்பதற்கு அப்பால் ஒழுக்கம் மிக்க சிறந்த மனிதராகவூம் விளங்குபவர்தான் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.
இவர் மொத்தம் 198 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 327 இன்னிங்களை விளையாடியுள்ளார். இவர் ஒட்டு மொத்தமாக 15837 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவரது ஓட்ட சராசரி 53.86 ஆகும்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமைக்குரியவரான சச்சின், டெஸ்டில் அதிக ஓட்டங்களைக் குவித்தவராகவும் விளங்குகிறார். இவரே டெஸ்டில் அதிக சதங்களைப் (51) பெற்றவரும் ஆவார் அது மாத்திரமின்றி நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற பெருமையையூம் இவர் பெறுகிறார்.
23 வருடங்களுக்கு மேலாகக் கிரிக்கெட் விளையாடி வரும் இவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெறவுள்ளார். இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் இவரது 200ஆவது ஆட்டமாக அமையும் அதேவேளை புதியதொரு மைல் கல்லை எட்டும் நிகழ்வாகவும் அமையவூள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வூபெற்றுள்ள இவர்,டெஸ்டிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளமையால் இவரது கடைசி இரு ஆட்டங்கள் மீதும் அனைவரதும் கவனமும் குவிந்துள்ளது.
இதனால் இவரும் ஓய்வூபெற்றபின்னர் டெஸ்டில் குறிப்பிடக்கூடியளவுக்கு சிறந்த வீரர்கள் எவருமில்லை என்ற நிலைப்பாடே காணப்படுகிறது.
இவH தனது ஓய்வூ குறித்த முடிவை அறிவித்ததையடுத்து டெஸ்டில் சிறந்த வீரH யார் என்ற விவாதங்கள் பரவலாக இடம்பெறத்தொடங்கியூள்ளன.
அந்த வகையில் அவூஸ்திரேலியப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் சச்சின் டெண்டுல்கர், லாரா, ரிச்சர்ட்ஸ், பிரட்மன்,பொண்டிங், கேரி சோபர்ஸ்இ ஜக் கலிஸ்இ லென் ஹட்டன்இ ராகுல் டிராவிட், ஆலன் போரர் ஆகியோரைக் குறிப்பிட்டு, இவர்களுள் யார் சிறந்த டெஸ்ட் வீரர் எனக் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் சச்சின் டெண்டுல்கரே அனைவரையூம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை வகித்தார். அடுத்தடுத்த இடங்களில் பிரட்மன்ர் லாரார் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இருந்தனர்.
இதேபோல இன்னும் பல விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதையடுத்தே நாம் இப்பத்தியில் டெஸ்டில் பிரகாசித்த முன்னணி ஜாம்பவான்களான பிரட்மன், ரிச்சர்ட்ஸ்இ சச்சின் டெண்டுல்கர், லாரா ஆகியோரது ஆட்டத் திறன்கள் குறித்து ஓரளவூ விரிவாக இங்கு ஆராய்ந்துள்ளோம்.
ஒட்டுமொத்த அடிப்படையில் பார்த்தால், சாதனைகளின் சிகரமாக விளங்குபவர் சச்சின்தான். ஆனால் அவரைவிட. தான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தனது திறனை நிரூபிக்கத் தவறாத பிரட்மனையும் இங்கு நாம் பின் தள்ளிப் பார்க்க முடியாது. அவர் தனது கால கட்டத்தில் நடைபெற்ற குறைந்த போட்டிகளடிப்படையிலேயே குறைந்த போட்டிகளில் விளையாடியதுடன் ஓட்ட எண்ணிக்கையிலும் குறைவாகக் காணப்படுகிறார். அவரது ஓட்ட சராசரி அடிப்படையில் பார்த்தால் அவருக்கும் கூடுதலான போட்டிகளில் விளையாடும் வகையில் அக்கால அட்டவணை அமைந்திருப்பின் அவர் சச்சினை விஞ்சக்கூடிய நிலைமை இருந்துள்ளது. அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
அதேவேளை, நாம் இங்கு ஆராய்ந்து பார்த்ததற்கு அமைய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களான ரிச்சர்ட்ஸ், லாரா ஆகியோரும் திறமையானவர்களாகவே உள்ளபோதும் இவHகள் இருவரையும் விட சச்சின், பிரட்மன் இருவரும் முன்னிலை வகிக்கின்றனர் என்பதே உண்மை.

No comments:
Post a Comment