எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (4)
கடந்த வாரத் தொடர்ச்சி...
முதலாவது தங்கப்பந்தை
வென்ற நசாஸி
கடந்த தொடர்களில் ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடர்களினதும் இறுதியாட்டங்களில் பங்கேற்ற அணிகள் குறித்தும் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிகள் குறித்தும் பார்த்தோம். இனி இப்பத்தியில் அதே உலகக் கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட ஏனைய வெற்றிகள் குறித்துப் பார்ப்போம்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் வெல்கின்ற அணிக்குக் கிடைக்கின்ற விருதுகளைப் போலவே, அத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட திறமைகளுக்கான விருதுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.