Monday, May 12, 2014


எஸ்.ஜெயானந்தன்

சூடு பிடித்த ஆட்டம்

பரபரப்புடன் இந்தியாவில் தற்போது நிலைகொண்டுள்ள ஏழாவது இருபது-20 ஐ.பி.எல். சூறாவளி ஆட்டம், மிகுந்த சுவாரஷ்யங்களுடன் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

இந்திய பொதுத் தேர்தல் காரணமாக கடந்த மாதம் 16ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (அபுதாபி, டுபாய், சார்ஜா) நடைபெற்றன. பின்னர் எஞ்சிய போட்டிகள் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரின் சில சுவாரஷ்யமான விடயங்கள் குறித்து இங்கு அலசுவோம்.

ஆடை மாற்றிய மங்கையர்

ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியிலும் விறுவிறுப்பு இருக்கும். அதேபோல கிளுகிளுப்புக்கும்  பஞ்சமிருக்காது.
அந்த வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது ரசிகர்களுக்கு நடன விருந்தை வழங்கி வந்த நடன மங்கையர் ஆடைகளை முழுமையாக அணிந்து, (அந்நாட்டு கலாசாரத்திற்கேற்ப) தமது ஆட்டங்களைக் காட்டினார்.
இத்தகைய ஆடை அணிகலன்களுடன் கவர்ச்சியின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ரசிகர்களை ஏமாற்றிய இந்த நடன மங்கையர்கள், தற்போது இந்தியாவுக்கு ஐ.பி.எல். தொடர் மாறியுள்ள நிலையில், தமது கவர்ச்சி ஆட்டங்களால் ரசிகர்களைக் கு´ப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இனி ரசிகர்களின் நிலை கொண்டாட்டம்தான்.

பஞ்சாப் - மும்பையின் 
தொடர் பயணத்துக்கு முற்றுப்புள்ளி

தொடர் வெற்றி மற்றும் தொடர் தோல்வி என ஐ.பி.எல். அரங்கில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பஞ்சாப் அணி மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான ஆட்டத்திலும் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆட்டங்கள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்தது பஞ்சாப் அணி. அதேபோல எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெற முடியாத நிலையில் மும்பை அணி திண்டாடிக்கொண்டிருந்தது.
ஆனால், போட்டிகள் இந்தியாவுக்குத் திரும்பிய கையோடு, இந்த அணிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்து வந்த பஞ்சாப் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்திலேயே இந்த மாற்றம் ஏற்பட்டது.
கடந்த 3ஆம் திகதி மும்பை வ Vன்கடே மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியின் மூலமே தொடர் என்ற பதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அதாவது பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த மும்பை அணி, தனது தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் வெற்றியிலக்கை நோக்கிய ஆடிய மும்பை அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 170 ஒட்டங்களைச் சேர்த்ததன் மூலம் வெற்றிபெற்றது.

பொல்லார்ட்dஸ்ராக் மோதல்

இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், மும்பை d பெங்களூர் அணிகள் மோதின. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அதாவது, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வீரர்கள் இடையே அவ்வப்போது சின்னசின்ன சீண்டல்dஉரசல்கள் நடந்து வந்த நிலையில், நேற்றிரவு பெங்களூர்dமும்பை அணிகள் இடையிலான ஆட்டத்தில் மிகப்பெரிய மோதல் வெடித்தது.
இந்த ஆட்டத்தின் 17ஆவது ஓவரை பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் (அவுஸ்திரேலியா) மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதை மும்பை இந்தியன்ஸ் அணியின் சகலதுறை வீரரான கீரன் பொல்லார்ட் (மே.இ.தீவுகள்) எதிர்கொண்டார். அந்த ஓவரின் 3ஆவது பந்தை ஸ்டார்க் தலைக்கு மேல் பவுன்சராக வீச, அதை அடிக்க முடியாமல் பொல்லார்ட் தடுமாறினார். உடனே ஸ்டார்க் அவரை நோக்கி ஏதோ வசைபாடியபடி செல்ல, பதிலுக்கு பொல்லார்ட்...போ...போ என்பதுபோல் கையால் சைகை காட்டினார்.
பின்னர் அடுத்த பந்தை ஆக்ரோ­மாக வீச ஓடி வந்தார். ஸ்டார்க். அப்போது திடீரென பொல்லார்ட் விலகினார். வழக்கமாக இவ்வாறு துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டத்துக்குத் தயாராகாமல் விலகினால், உடனே பந்துவீச்சாளர் பந்து வீசுவதை நிறுத்தி விடுவார். ஆனால் ஸ்டார்க்கோ, ஆத்திரத்தில் பொல்லார்ட் விலகிய திசையில் குறி வைத்து எறிந்தார். இதில் நிதானத்தை இழந்த பொல்லார்ட், ஸ்டார்க்கை நோக்கி தனது துடுப்பு மட்டையை வேகமாக வீசினார். ஆனால், அது கைநழுவி பொல்லார்ட் அருகிலேயே விழுந்தது.
இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனே நடுவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்றனர். சக வீரருக்கு ஆதரவாக பெங்களூர் அணித்தலைவர் விராட் கோலி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதற்கிடையே பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல் (மே.இ.தீவுகள்) சக நாட்டவரான பொல்லார்ட்டை சமாதானப்படுத்தினார்.  இந்த மோதல் மைதானம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தாமலா இருக்க முடியும்?

பொறுமையிழந்த முரளிதரன்

இலங்கை அணியின்          சுழல் ஜாம்பவானாக இருந்து எதிரணிகளுக்கு மாயாஜால வித்தை காட்டி உலக சாதனையாளராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றுள்ள முத்தையா முரளிதரன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணி சார்பாக விளையாடி வருகிறார். (விளையாடி வருகிறார் என்பதற்குப் பதிலாகக் கலந்துகொண்டு வருகிறார் என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்.)
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோச்சி டஸ்கெர்ஸ் கேரளா அணிகளுக்காக விளையாடியுள்ள முரளிதரன், தற்போது பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
நடப்புத் தொடரில் பெங்களூர் அணியுடனே சுற்றித் திரியும் முரளிதரனுக்கு இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம்தான் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு. அதுவும் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு ஓவர்களை மாத்திரமே வீசிய அவர், 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தபோதும் எந்தவொரு விக்கெட்டையும் சாய்க்கவில்லை.
இந்தப் போட்டி தவிர்ந்த ஏனைய ஆட்டங்கள் எதிலும் பங்கேற்காத நிலையில், மேலதிக வீரர்களுடன் மைதானத்துக்கு வெளியே ஆசனத்தில் உட்கார்ந்து போட்டிகளைக் கண்டுகளித்து (வெறுப்புடன் இருந்துவந்தவர் என்றாலும் பொருத்தமாக இருக்கும்) வந்த அவர், திடீரென ஐ.பி.எல். உள்ளிட்ட உள்ளூர் அணிகளுக்காக விளையாடி வரும் அனைத்து இருபதுd20 போட்டிகளிலிருந்து இந்த ஐ.பி.எல். தொடர் முடிவடைந்தவுடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத இவர், இந்தியா வந்ததும் இந்த அறிவிப்பை அதிரடியாக விடுத்தார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடி சலிப்படைந்த காரணத்தினாலேயே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே சலிப்படைந்துதான் போயுள்ளார் போலும்...

No comments:

Post a Comment

Total Pageviews