Monday, May 12, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (2)

கடந்த வாரத் தொடர்ச்சி...
ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடர் 1954ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் ஹங்கேரி அணியை எதிர்கொண்ட மேற்கு ஜேர்மன் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதல் முறையாகச் சம்பியன் பட்டம் வென்றது.

1958ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற ஆறாவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதியாட்டத்தில், போட்டியை நடத்தும் சுவீடன் அணியை எதிர்கொண்ட பிரேஸில் அணி, 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தனது உலகக் கிண்ண வேட்டையை ஆரம்பித்தது.
பின்னர் 1962ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதியாட்டத்துக்கும் நடப்புச் சம்பியன் என்ற கோதாவில் களமிறங்கிய பிரேஸில் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவோக்கியாவை பின் தள்ளி சம்பியன் பட்டத்தை நிலைநாட்டிக்கொண்டது.
1966ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பினை இங்கிலாந்து, தான் கொண்டிருந்த உலகக் கிண்ணத் தாகத்தையும் தீர்த்துக்கொள்வதற்கான தக்க தருணமாகப் பயன்படுத்தியது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜேர்மனியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 4d2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தனது கிண்ணத் தாகத்தைத் தணித்துக்கொண்டது.
1970ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில், மீண்டும் இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற முன்னாள் சம்பியன்களான பிரேஸில் மற்றும் இத்தாலி அணிகள் கிண்ணத்தை வென்று, உலகக் கிண்ண வரலாற்றில் முன்னிலை பெற மல்லுக்கட்டின. மிகுந்த ஆக்ரோ­த்துடன் ஆடிய பிரேஸில் வீரர்கள், ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியையும் பெற்றனர். இதன் மூலம் உலகக் கிண்ணத்தை 3 தடவைகள் வென்ற அணி என்ற பெருமையையும் பிரேஸில் அணி தனதாக்கிக்கொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் மைல்கல் அத்தியாயமான 10ஆவது தொடரை நடத்தும்  வாய்ப்பைப் பெற்ற ஜேர்மனி, 1974ஆம் ஆண்டு அத்தொடரை சிறப்பாக நடத்திக்காட்டியது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சம்பியனான மேற்கு ஜேர்மனி அணி,  முதல் முறையாக இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற நெதர்லாந்து அணியை,  2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னர் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவில் நடைபெற்ற அடுத்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதியாட்டத்துக்கு மீண்டும் தகுதி பெற்ற நெதர்லாந்து அணியை, முதலாவது உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற ஆர்ஜென்ரீனா அணி எதிர்கொண்டது.
இரு அணிகளுமே தலா ஒருமுறை ஏற்கனவே இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்று சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டிருந்தமையால், இம்முறை எப்படியாவது கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற அவாவில் களமிறங்கின.
சொந்த மண்ணில் நடைபெற்ற இப்போட்டியில், எதிரணியின் கோல் எல்லைகளுக்குள் அதிரடியாக புகுந்துவிளையாடிய ஆர்ஜென்ரீனா வீரர்கள், எதிரணிக்கு வாய்ப்பொன்றை நழுவவிட்டபோதும், தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கோலாக மாற்றி, 3d1 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தம் பக்கம் திருப்பினர்.
1982ஆம் ஆண்டு ஸ்பெய்னில் நடைபெற்ற 12ஆவது தொடரின் இறுதியாட்டத்தில் இத்தாலி அணி, தனக்குக் கிடைத்த மற்றொரு சந்தர்ப்பத்தை சாதூர்யமாகப் பயன்படுத்திக்கொண்டது. எதிர்த்தாடிய மேற்கு ஜேர்மனி ஒரு கோலைப் போட்டபோதும், இத்தாலி 3 கோல்களைப் போட்டு 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தைப் பெற்ற இத்தாலி, பிரேஸில் அணியுடன் (3) அதிக தடவைகள் பட்டம் வென்ற அணி என்ற சாதனையைச் சமன்செய்தது.
(உதை தொடரும்)

No comments:

Post a Comment

Total Pageviews

8,866