Monday, April 28, 2014

எஸ்.ஜெயானந்தன்


மூடிய அறைக்குள் பேசுதல்

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.

Monday, April 21, 2014

எஸ்.ஜெயானந்தன்

பணம் கொழிக்கும்
பரபரப்பு மிகு தொடர்

உலகளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ரசிகர்களைத் தன்னகத்தே கவர்ந்துள்ள உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிதான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுd20 போட்டி. இதில் புரளும் கோடி ரூபாய்கள்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆச்சரியமிகுந்ததாகும்.

Tuesday, April 15, 2014

எஸ்.ஜெயானந்தன்

இது எப்படி சாத்தியமாயிற்று?

பங்களாதே´ல் பெரும் பரபரப்புடன் நடைபெற்று வந்த இருபதுd20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது உலகக் கிண்ணக் காய்ச்சல்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் இத்தொடரின் முதலாவது கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் வைத்து இந்திய அணி கைப்பற்றியது.

Monday, March 24, 2014

எஸ்.ஜெயானந்தன்

நல்லதொரு தருணம்!

 இலங்கை அணியின் தற்போதைய முன்னணித் துடுப்பாட்ட வீரர்களுள் முக்கியமான முதல் இரு இடங்களில் உள்ளவர்கள் என்றால், ஒருவர் குமார் சங்கக்கார மற்றையவர் மஹேல ஜெயவர்தன.
இவர்கள் இருவரும் இலங்கை அணியை வழி நடத்திய காலகட்டத்தில், அணியை சிறப்பான பெறுபேறுகளைப் பெற வழிவகுத்தவர்கள்.
எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே சவால் விடுத்தவண்ணமே இருக்கக்கூடியவர்கள் இவர்கள், தற்போது கூட இவர்களின் ஆட்டத்தைக் காண்பதற்காகவே இலங்கை அணி விளையாடும் போட்டிகளைத் தவறவிடாதவர்கள் பலர் உளர்.

Monday, March 17, 2014

எஸ்.ஜெயானந்தன்

அதிரடித் தொடர்
இன்று ஆரம்பம்

விளையாட்டு என்றால்.... அது போட்டிகள் நிறைந்ததே. இல்லையேல் அது  விளையாட்டு இல்லை. அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் அந்தந்தப் போட்டிகளில் மிகவும் உயர்வாக எதாவது ஒரு போட்டித் தொடர் காணப்படும். அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப்பெரிய தொடர் என்றால் அது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்தான்.
ஆரம்ப காலத்தில் வரலாற்றுச்         சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளே கிரிக்கெட் போட்டிகளாக நடத்தப்பட்டன. பின்னர் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு அதில் உலகக் கிண்ணத்துக்கான போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.

Total Pageviews