Sunday, December 20, 2015


மீசை முறுக்கிய வீரா்கள்

ஆசியர்களான, அதிலும் தெற்காசியர்களாகிய எமக்கு மிகவும் பரீட்சயமான - எமது நாட்டு அணி
சாதிக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டாகத்தான் இருக்கும்.
இத்தகைய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு ஸ்டைல்களில் தம்மை மாற்றிக்கொண்டு களமிறங்கி ரசிகர்களைக் கவர்வர்.
அந்த வகையில் அந்தக் காலம் தொடக்கம் இந்தக் காலம் வரை தமிழர்களாகிய நம்மை அடையாளம் காட்டும் முறுக்கு மீசையை வளர்த்து விளையாடிய - விளையாடும் பல்வேறு நாட்டு வீரர்கள் சிலர் குறித்து இங்கு சிறிது அலசுகிவோம்.

Sunday, August 23, 2015

உள்ளங்கவா் கள்வன் சங்காவின் ஓய்வு!

விளையாட்டு உலகில் பல்வேறுபட்ட துறைகளில் பல்வேறுபட்ட 
சாதனைகள் படைக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் வெவ்வொரு வகைகளில் உயர் நிலை வகிக்கின்றனர். விளையாட்டு மூலம் நிகழ்த்தும் இத்தகைய சாதனைகளுக்கு அப்பாலும் உயர்ந்து நிற்கவேண்டின், அவர்கள் தத்தமது கள நிலைகளில் ஒழுக்க நிலைகளையும் கடைப்பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.

Sunday, August 16, 2015

எங்ககிட்டயேவா?
லங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இதன் முதலாவது ஆட்டம் கடந்த 12ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது. 
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டம் காரணமாக முதல் நாளிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 

Sunday, August 9, 2015

சங்காவின் கடைசித் தொடர்

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Sunday, July 12, 2015

தொடரும் கிரிக்கெட் கொலைகள்!


எஸ். ஜெயானந்தன்
2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின்போது அவுஸ்திரேலிய சர்வதேச அணியில் இடம்பிடித்திருந்த பிலிப் கியூஸ், எதிரணி வீரரின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓரிரு தினங்களில் மரணத்தை எட்டியமை கிரிக்கெட் உலகை மாத்திரமின்றி விளையாட்டு உலகையே கலங்க வைத்தது.

Sunday, June 28, 2015

28_06_2015 sunday thinakkural


எஸ். ஜெயானந்தன்
போல்டின் கதை முடிந்துவிட்டதா?
உலக குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் பல்வேறுபட்ட சாதனைகளுக்குச் சொந்தக் காரராக விளங்குபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட்.
1986ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜமைக்காவில் பிறந்த இவர், 6.5 அடி உயரம் கொண்டுள்ளார். தனது உயரத்தையும் திறனுடன் கூடிய வியூகங்களையும் ஒருங்கிணைத்து நடப்புக் காலகட்டத்தில் முதல் தர ஓட்ட வீரராக விளங்குகிறார் இவர்.

Sunday, June 21, 2015

21.06.2015 sunday thinakkural


எஸ். ஜெயானந்தன்

யாருக்கு என்ன இலாபம்?

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்."  இது முன்னோர்கள் நமது கிராமத்துச் சிறார்களுக்குக் கூறும் அறிவுரை. ஆனால், உலகளவில் நோக்கும்போது விளையாட்டு என்பது விளையாட்டு என்பதற்கு அப்பால் வாணிகமாகவும் மாறிவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக எமக்கு மிகவும் பரிச்சார்த்தமான உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் (ஐ.பி.எல்.) போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் உள்ளூர் அணிகள் மோதும் ‘லீக்’ போட்டிகளைக் குறிப்பிடலாம்.

Monday, June 15, 2015

14_06_2015 sunday thinakkural


எஸ். ஜெயானந்தன்

சாதனைக்கான போட்டி

‘பிபா’ நடத்தும் பெண்களுக்கான ஏழாவது உதைபந்தாட்டத் தொடர் கனடாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது. ஜூலை 5ஆம் திகதி நடைபெறும் இறுதியாட்டத்துடன் நிறைவுபெறும்.

Monday, May 25, 2015

24.05.2015 sunday thinakkural


டென்னிஸ் போட்டிகளில் மிகப்பெரிய தொடர்களாக அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின், விம்பிள்டன் ஓப்பின் மற்றும் அமெரிக்க ஓப்பின் ஆகியன விளங்குகின்றன.

Monday, May 18, 2015

இங்கிலாந்து-நியூஸிலாந்து டெஸ்ட்


‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’

 பரபரப்புக் கட்டம்!
ரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தினால் 1955ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது ‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’ தொடர். ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சம்பியன் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்டதுடன், இத்தொடர் ஐரோப்பிய கிண்ணம் எனவும் அழைக்கப்பட்டது.

Sunday, March 29, 2015

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2015 - நடந்தது என்ன?

ஐ.சி.சி.யினால் நடத்தப்பட்டுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 11ஆவது அத்தியாயம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்தத் தொடரை அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து இணைந்து நடத்திவருகின்றன.

nz-aus



உலகக் கிண்ண இறுதியாட்ட மைதானமும் நாணயச் சுழற்சியும்


உலகக் கிண்ண இறுதியாட்டம்!


Sunday, March 15, 2015

சாதனைகளின் மறுபெயரா சங்கா?

அதுக்கும் மேல!

2011ஆம் ஆண்டு ஆசியக் கண்டத்தில் நடைபெற்ற 10ஆவது உலகக் கிண்ணத் தொடரில் எப்படி ஆசிய அணிகளின் - வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டதோ, அதேபோலவே தற்போது அவுஸ்திரேலியா- நியூஸிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலகக் கிண்ணத் தொடரிலும் தமது திறமைகளை எகிறவிட்டுள்ளனர். ஆசியர்கள் மாத்திரமின்றி மேலும் சில அணிகளும் பயங்கரமாக- மூர்க்கத்தனமாக ஆடிவருகின்றமையும்  இந்த உலகக் கிண்ணத் தொடரை பல மடங்கு

பெப். 14 முதல் மார்ச் 14 வரை


நேற்றைய ஆட்டங்களில் ஆஸி., இந்தியா வெற்றி

வாழ்வா, சாவா?
பாகிஸ்தான், அயர்லாந்து, மே.இ.தீவுகளுக்கு இன்று முக்கிய நாள்

11ஆவது உலகக் கிண்ணத் தொடரிலில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஸ்கொட்லாந்து அணியை அவுஸ்திரேலியாவும், சிம்பாப்வே அணியை இந்தியாவும் வெற்றிபெற்றன.
இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில்  அவுஸ்திரேலியா - ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலிய அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றபோதும், முதலில் களத்தடுப்பையே தெரிவுசெய்தது.

Total Pageviews